24 மணி நேரமும் காம இச்சையாம்.. அந்த நடிகையுடன்.. கார்த்திக் பற்றி பிரபலம் இப்படியெல்லாம் சொல்றாரே?
சென்னை: நவரச நாயகன் கார்த்திக்கை பற்றிய பேச்சாகத்தான் எங்கும் இருக்கிறது. 90களில் அவர் செய்த சேட்டைகள் பலவற்றை திரையுலக பிரபலங்களும், மூத்த பத்திரிகையாளர்களும் ஒவ்வொன்றாக வெளியிட்டுவருகிறார்கள். பாரதிகண்ணன் கொடுத்த பேட்டியிலிருந்து இந்த விவாகரங்கள் எல்லாம் வரிசைகட்ட ஆரம்பித்திருக்கும் நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஓபனாக பேசியிருக்கிறார்.
முத்துராமனின் மகனான கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். நடிப்பு, நடனம் என அத்தனையிலும் தனித்து விளங்கிய அவர் அந்தக் கால சாக்லேட் பாயாக வலம் வந்தார். பல பெண்களின் ஆசை நாயகனாக இருந்த அவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் தங்கையையே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகனும் சினிமாவில்: கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக்கும் தனது தந்தை போலவே லெஜண்ட் இயக்குநரின் இயக்கத்தில் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய படத்தில் இன்ட்ரோ ஆனதால் கண்டிப்பாக திரைத்துறையில் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி ஒரு ஹிட் படத்தில்கூட நடிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றே.

கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸ்: சினிமாக்களில் நடிப்பதை இப்போது ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்ட கார்த்திக் அனேகன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதில் வில்லனாக தோன்றிய அவர் வேறு ஒரு பரிணாமத்தில் நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளியிருந்தார். அதேபோல் என்னை அறிந்தால் படத்தில் முதலில் அவர்தான் வில்லனாக நடிக்க வேண்டியவர் என்றும்; ஆனால் அஜித் தலையிட்டதால் அதில் அவரால் நடிக்க முடியாமல் போனது என்பதும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கின்ற தகவல்.
பாரதிகண்ணன் பற்ற வைத்தது: சினிமாவிலிருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்ந்துவரும் கார்த்திக் பற்றித்தான் கடந்த சில வாரங்களாக பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இயக்குநரும் நடிகருமான பாரதிகண்ணன் அளித்த ஒரு பேட்டியில், தயாரிப்பாளரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கால்ஷீட் தராமல் கார்த்திக் சொதப்பிய சம்பவத்தை பகிர; அவர் செய்த சேட்டைகள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாக தொடங்கியிருக்கின்றன.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு கால்ஷீட் தரமாட்டார் கார்த்திக். அதேபோல் அவருக்கு பாடி டிமாண்ட் அதிகமாக இருந்தது. அவரும் நடிகை ராதாவும் ரொம்பவே அன்யோன்யமாக இருந்தார்கள். பல பெண்களை காதலித்திருக்கிறார். ஆனால் அவர் விவரமான ஆள். காதலிக்க மட்டும்தான் செய்வார். திருமணமெல்லாம் செய்துகொள்ளமாட்டார். தன்னுடன் நடித்த ஒரு பெண்ணையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு அவரது ட்ராக் வேறு மாதிரி போனதால் கார்த்திக்கின் மனைவி தனது தங்கையையே அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











