விஷால் பிறந்தநாள்.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. அடேங்கப்பா இவ்வளவா?
சென்னை: நடிகர் விஷால் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக முத்தையாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். அவர் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்
ரத்னம் விஷால்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்தார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கலவையான விமர்சனம்: அந்த எதிர்பார்ப்போடு சில மாதங்களுக்கு முன்பு ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஷால் ரசிகர்களும், ஹரியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர். படத்தின் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் ஹரி பட்டையை கிளப்பிவிட்டார் என்று ஒருதரப்பு ரசிகர்கள் கூறினாலும்; இன்னொரு தரப்பினரோ எதிர்பார்த்தபடி இல்லை என்று பேசினார்கள். அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மெகா ஹிட்டானதால் ரத்னம் டல்லடித்துவிட்டது.

அடுத்த படம்: அடுத்ததாக குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்றும்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்று கூறி தனது அரசியல் பிரவேசத்தையும் அவர் அறிவித்திருக்கிறார்.
சொத்து மதிப்பு: இந்நிலையில் விஷால் இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் விஷாலின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படும் அவருக்கு மொத்தம் 80லிருந்து 90 கோடி ரூபாய்வரை சொத்து இருப்பதபாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சில கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











