Vikram Net Worth - அடேங்கப்பா சியான் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?.. வாய் பிளந்த ரசிகர்கள்
சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
ஆதித்த கரிகாலன்: விக்ரம் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிரட்டியிருந்தார் விக்ரம். அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தங்கலான் படம் அவரது திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
விரைவில் ரிலீஸ்: முதலில் அந்தப் படம் ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஏப்ரலுக்கு பிறகு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருக்கும் விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மூலம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு: இந்நிலையில் சியான் விக்ரமின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு 30லிருந்து 40 கோடி ரூபாய்வரை விக்ரம் சம்பளமாக வாங்குகிறாராம். அவரது மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய்வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வேறு பல தொழில்களில் இன்வெஸ்ட் செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை விக்ரம் பார்ப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. மேலும் விக்ரம் Porsche 922 Turbo (மூன்று கோடி ரூபாய், Audi q 7 (80 லட்சம் ரூபாய்), Toyota Land Crusier (86 லட்சம் ரூபாய்), Audi A4,Audi R8 ஆகிய சொகுசு கார்களை வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











