அட இது செம மேட்டரா இருக்கே.. தளபதி 69ல் கமல் ஹாசன் எப்படி வந்திருக்காரு தெரியுமா?.. விஜய் ஹேப்பி
சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன. செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸ். இந்தச் சூழலில் விஜய் அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்படும் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஸ்டார்களில் ஒருவரான விஜய் கடைசியாக நடித்த லியோ, வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக பெருத்த அடியை வாங்கின. இதன் காரணமாக அடுத்த படத்தை சூப்பர் ஹிட்டாக்க காத்திருக்கிறார். அதன்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அஜித்துக்கு மங்காத்தா படத்தை கொடுத்தது போல் விஜய்க்கு GOAT படத்தை வெங்கட் பிரபு கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அரசியல் பிரவேசம்: இதற்கிடையே இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். இதன் காரணமாக இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன். அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்திருந்தார். 200 கோடி ரூபாய்வரை அசால்ட்டாக வியாபாரம் நடக்கும்போது அதை விட்டுவிட்டு விஜய் மக்கள் பணியில் கவனம் செலுத்துவது பாராட்டையும் பெற்றது.
அடுத்த படம்: விஜய் அறிவித்தபடி தளபதி 69 உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கப்போது யார் என்ற லிஸ்ட்டில் வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் படத்தை இயக்கப்போவது ஹெச்.வினோத்தான் என பேச்சு பலமாகவே எழுந்திருக்கிறது. வினோத் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் என்பதாலும்; அவரது படங்களில் எப்போதும் இருக்கும் ஒரு அரசியல் டச் தனக்கு உதவ வாய்ப்பிருப்பதாக விஜய் கருதுகிறார்.
எப்போது ஷூட்டிங்: இந்தப் படத்துக்கு வழக்கம்போல் அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஹீரோயினாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும்; ஆனால் சில காரணங்களால் சமந்தா இதில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில் தளபதி 69 படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
விஜய்யுடன் கமல்?: அதாவது இந்தப் படத்தில் கமல் ஹாசனின் பங்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு கமலும், ஹெச்.வினோத்தும் இணையவிருப்பதாக சொல்லி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. இப்போது அந்தக் கதையைத்தான் விஜய்யிடம் சொல்லி வினோத் ஓகே வாங்கியிருப்பதாகவும்; இந்தப் படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தியது என்றும் கோலிவுட்டில் குரல்கள் கேட்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள்; வினோத் அரசியல் படம்னா நல்லா எடுப்பாரு; நல்லவேளை கமலுக்கு பதில் விஜய் நடிக்கிறார் என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











