ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ எப்போது?.. வெளியான சூப்பர் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த அந்தப் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் பல வருடங்களாக அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் தோல்வியடைந்தன. அதாவது அவர் நடித்த அண்ணாத்த, தர்பார் உள்ளிட்ட படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. தோல்வியை மட்டும் சந்திக்காமல் அந்தப் படங்கள் பெரும் ட்ரோல்களையும் சந்தித்தன. அதேசமயம் விஜய்யின் படங்கள் தொடர்ந்து நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்தன. இதன் காரணமாக கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

rajinikanth jailer 2 nelson dilipkumar 2

ஜெயிலர் ரிலீஸ்: இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் கமிட்டானார் ரஜினிகாந்த். அது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. ஏனெனில் ஜெயிலருக்கு முன்பு நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்தை எப்படி காட்டப்போகிறார்கள் என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர். படம் மெகா ஹிட்டாக கூட வேண்டாம்; ட்ரோலுக்கு உள்ளாகாமல் இருந்தால் போதும் என்று ரஜினியின் ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள்.

மெகா ஹிட்: நிலைமை இப்படி இருக்க ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் அத்தனை ஏரியாக்களிலும் பூர்த்தி செய்தது. ஸ்க்ரீன் ப்ளே, ரஜினியின் நடிப்பு, ஆக்‌ஷன் என பல விஷயங்களில் நெல்சன் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருந்ததாக சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கூறினார்கள். அதேபோல் பான் இந்தியா அளவில் ஸ்டார்களை இறக்கி அவர்களுக்கு ஏற்றவாறும் மாஸ் சீன்களை வைத்திருந்தார். இதன் காரணமாக படம் மெகா ஹிட்டானது.

வசூல் சாதனை: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டது. உலகம் முழுவதும் அந்தப் படம் 700 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூலையும் ஜெயிலர் முறியடித்தது. இந்த வசூல் சாதனையை பார்த்த ரஜினியின் ரசிகர்கள்; தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் மட்டும்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஜெயிலர் 2: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. கண்டிப்பாக படத்தின் முதல் பாகம் மாதிரியே இரண்டாவது பாகமும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். சூழல் இப்படி இருக்க படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் நடந்ததாகவும் ரஜினியின் பிறந்தநாளுக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ப்ரோமோ ஷூட்டிங் இரண்டு நாட்கள் நடைபெற்றதாகவும் பொங்கலுக்கு ப்ரோமோ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X