அடேங்கப்பா சித்தார்த் - அதிதி இரண்டு பேரின் சொத்தை சேர்த்தா இவ்வளவு வருதா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சென்னை: சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருப்பது. அதேபோல் அதிதி ராவும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இவர்களது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

Siddharth Aditi

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனது மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.

சித்தா: சூழல் இப்படி இருக்க அவர் சித்தா என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். நல்ல எதிர்பார்ப்புக்கிடையே வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்தனர். குறிப்பாக சித்தார்த்தின் கரியரிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் படமாக அமைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் கூறினர். இதனால் சித்தார்த் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். அடுத்ததாக இந்தியன் 2 வெளியாகிறது. மேலும் மிஸ் யூ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

காதல்: இதற்கிடையே சித்தார்த்துக்கும் அதிதி ராவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படத்தை பகிர்ந்து உறுதி செய்திருந்தார் சித்தார்த். இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு: இந்நிலையில் இருவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அதிதி ராவ் ஒரு படத்துக்கு 1 கோடி ரூபாய் மற்றும் விளம்பரத்தில் நடிக்க 50 லட்சம் ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் ஹைதராபாத்தில் ஒரு பங்களாவும், மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் வைத்திருக்கிறாராம். மேலும் அவரிடம் ஆடி க்யூ 7, பென்ஸ் க்யூ எல் எஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ஆகிய கார்கள் இருக்கின்றனவாம். ஆக மொத்தம் அவரிடம் 60 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கிறதாம்.

அதேபோல் சித்தார்த்துக்கு மும்பை, சென்னை ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்கள் இருக்கின்றனவாம். மேலும் ரோல்ஸ் ராய்ஸ், என்ஸ், ஆடி ஏ4 ரக கார்கள் வைத்திருக்கிறாராம். ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கும் அவருக்கு மொத்தம் 70 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். ஆகமொத்தம் இரண்டு பேருக்கும் சேர்த்து 130 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கின்றனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X