Sivakarthikeyan - இப்போ 25 கோடி ரூபாய்.. முதல் படத்துக்கு சிவகார்த்திகேயன் சம்பளம் என்ன தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்து வசூலிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. தற்போது அவர் தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். விஜய் அரசியலுக்கு சென்றிருப்பதால் அவரது இடத்தை நிரப்புவதற்கு சிவகார்த்திகேயன் மட்டும்தான் இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

Here are the details about Sivakarthikeyan First Movie Salary

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.

எதிர்பார்ப்பில் எஸ்கே 21: தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றி படங்களாக சிவகார்த்திகேயனுக்கு அமைந்திருக்கின்றன. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஹாட்ரிக் வெற்றியாக அவர் தற்போது நடித்துவரும் எஸ்கே 21 படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கிறது.படத்துக்கு போர்கண்ட சிங்கம் என்று பெயர் வைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. முக்கியமாக ராணுவ வீரர் ஒருவரின் பயோபிக்காக இந்தப் படம் உருவாவது குறிப்பிடத்தக்கது

சம்பளம்: சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமானபோது இவர் எல்லாம் 10 படங்கள்கூட தாண்டமாட்டார் என்றுதான் பலரும் பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அவர் தனது பாதையில் தெளிவாக பயணப்பட்டதால் தற்போது டாப் 10ல் இருக்கிறார். டான், டாக்டர் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் கிளப்பிலும், மாவீரன், அயலான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாயை நெருங்கியும் இருக்கின்றன. இதனால் சிவகார்த்திகேயனின் சம்பளமும் ஏறியிருக்கிறது.

10,000 டூ 25 கோடி ரூபாய்: 3 படத்தின் மூலம் சிவா அறிமுகமானாலும் ஹீரோவாக மெரினாதான் அவருக்கு முதல் படம். இப்போது அவர் ஒரு படத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. எஸ்கே 21 படமும் ஹிட்டடிக்கும்பட்சத்தில் கண்டிப்பாக சிவகார்த்திகேயனின் சம்பளம் 35 கோடி ரூபாயை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் மெரினா படத்துக்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு அந்தப் படத்துக்காக பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் வளர்ச்சினா இதுதான் வளர்ச்சி; பத்தாயிரம் ரூபாயிலிருந்து 25 கோடி ரூபாய்வரை வளர்ந்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X