போடு செம.. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். அடுத்ததாக புறநானூறு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கவிருக்கிறார். கண்டிப்பாக கார்த்திக் சுப்புராஜுடன் அவர் இணையும் படம் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அதேசமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பல மொழிகளில்: சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படம்தான் ஹை பட்ஜெட் படம். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்காக அவரும் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னை, கோவா, தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்; இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
அடுத்த படம்: கங்குவா படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் துல்கர் சல்மானும் நடிக்கிறார். படம் ட்ராப் ஆகிவிட்டதாக வெளியான தகவலை மறுத்த சூர்யா தரப்பு; விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியுள்ளது. சூரரைப் போற்று போலவே இந்தப் படத்திலும் சூர்யா - சுதா கூட்டணி சம்பவம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ்: இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி உருவாகியிருக்கிறது. தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் சூர்யா இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க அந்தப் படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











