ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற விஜய்.. புதிய கார் வாங்கியிருக்கிறாரா?.. அதுவும் எந்த கார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற விஜய்; இப்போது புதிய கார் ஒன்றை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

Vijay GOAT

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. அதேபோல் அப்டேட்டுகளும் சரமாரியாக வந்துகொண்டிருக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.

அடுத்த படம்: கோட் படத்தை முடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தவிருக்கும் விஜய் அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் ஹெச்.வினோத் தனித்து விளங்குகிறார். எனவே அவரது இயக்கத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று விஜய் கணக்கு போட்டிருக்கிறார். மேலும் அந்தப் படம் அரசியல் டச்சில் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. சமீபத்தில்தான் அதற்கான லுக் டெஸ்ட்டும் முடிந்ததாக தெரிகிறது.

விஜய்யின் புதிய கார்: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றார். அதனையடுத்து அவர் என்ன கார் வாங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் லெக்ஸஸ் காரை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் காரைத்தான் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X