தனுஷுக்கும் நாகார்ஜுனாவுக்கும் சண்டை?..சுட சுட வெளியான குபேரா அப்டேட் இதுதான்

சென்னை: தனுஷ் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் குபேரா படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் கோயில் நுழைவு போராட்டத்தையும், சாதிய ஏற்றத்தாழ்வையும், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரேஸில் பந்தயம் அடித்தது.

Dhanush Nagarjuna Kubera

தனுஷ் அப்செட்: தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோவிடமே தோற்றுவிட்டோமே என்று தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்ததாக அவர் தனது 50ஆவது படத்தில் நடித்திருக்கிறார். அதனை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

அடுத்த படம்: ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வாத்தி படத்தில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர் மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ஆனால் வாத்தி படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை நிலைநாட்டும் நோக்கத்தில் அவர் இருக்கிறார் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.

குபேரா: படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெட்டப்பே வேற மாதிரி இருக்கிறதே. அப்போ கதை எப்படி இருக்கும் என்று சமூக வலைதளங்களீல் ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தனர். படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கின்ரனர்.

ஷூட்டிங்: இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தனுஷுக்கும், நாகார்ஜுனாவுக்கும் இடையேயான சண்டை காட்சியை சமீபத்தில் சேகர் கம்முல்லா படமாக்கியதாகவும்; அது அவ்வளவு ரிச்சாக வந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் இதுவரை யாரும் போகாத லொக்கேஷனுக்கு சென்று படத்தின் முக்கிய காட்சிகளை சேகர் ஷூட் செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X