பிஸியான தனுஷுக்கு அடுத்த பட ஜோடி யார் தெரியுமா?.. பாலிவுட் நடிகையுடன் டூயட்

சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் நடிக்கவிருக்கும் பாலிவுட் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

Dhanush Kubera Kollywood

பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.

ராயன்: நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஜூலை 26ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.. அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் அவர்.

இதற்கிடையே ராயன் தவிர்த்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ்; இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கிறார். அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். அதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி நடிப்பில் படுபிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் தனுஷ்.

பாலிவுட் படம்: அதேபோல் பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கிறார் அவர். அந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ட்ரிப்தி டிம்ரி நடிக்கவிருப்பதாகவும், விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தில் தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X