GOAT அப்டேட்.. மங்காத்தா ஃபார்முலாவை கையில் எடுத்தாரா வெங்கட் பிரபு?.. விஜய் ரோல் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்பதாலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏற்கனவே மாஸ்டர் என்ற ஹிட் படத்தை கொடுத்ததாலும் லியோ மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் லியோ ஏமாற்றியது. முக்கியமாக திரைக்கதை, கதை என எதிலுமே புதுதாக ஒன்றுமே இல்லை. வேண்டுமென்றே எல்சியூவில் படத்தை கனெக்ட் செய்திருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

 Here are the New details about GOAT Movie

GOAT: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. பிறகு தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங்கை நடத்தினார் வெங்கட் பிரபு.

தடைப்பட்ட ஷூட்டிங்: விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்த சூழலில் பாடகியும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பவதாரிணி உயிரிழந்ததை அடுத்து GOAT ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. யுவனும், வெங்கட் பிரபுவும் தங்களது சகோதரியை நினைத்து சோகத்தின் உச்சத்துக்கே சென்றனர்.

தொடங்கிய ஷூட்டிங்: தடைப்பட்டிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தை பக்ரீத் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் வெங்கட் பிரபு மும்முரமாக பணியாற்றிவருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் விஜய் டபுள் ஆக்‌ஷன் என்றும்; டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாவதாகவும் ஒரு தகவல் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கமாண்டோ விஜய்: இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோ கமாண்டோ ட்ரெஸ்ஸில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது.

புதிய தகவல்: இந்நிலையில் GOAT படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது., அதன்படி இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஒரு வேடம் நெகட்டிவ் ரோலில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. மேலும் மங்காத்தா படத்திலும் அஜித்துக்கு நெகட்டிவ் ரோலைத்தான் வெங்கட் பிரபு கொடுத்திருப்பார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இப்படத்திலும் விஜய்க்கு நெகட்டிவ் ரோல் என தகவல் வெளியாகியிருப்பதால் கண்டிப்பாக GOAT படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று தளபதி ரசிகர்கள் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X