GOAT லேட்டஸ்ட் அப்டேட்.. விஜய்யுடன் இணைந்திருக்கும் பிரபலம் இவரா?.. போடு செம ட்ரீட் இருக்கு
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்பதாலும் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏற்கனவே மாஸ்டர் என்ற ஹிட் படத்தை கொடுத்ததாலும் லியோ மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் லியோ ஏமாற்றியது. முக்கியமாக திரைக்கதை, கதை என எதிலுமே புதுதாக ஒன்றுமே இல்லை. வேண்டுமென்றே எல்சியூவில் படத்தை கனெக்ட் செய்திருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

GOAT: இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. பிறகு தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங்கை நடத்தினார் வெங்கட் பிரபு.
தடைப்பட்ட ஷூட்டிங்: விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்த சூழலில் பாடகியும், வெங்கட் பிரபுவின் சகோதரியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பவதாரிணி உயிரிழந்ததை அடுத்து GOAT ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. யுவனும், வெங்கட் பிரபுவும் தங்களது சகோதரியை நினைத்து சோகத்தின் உச்சத்துக்கே சென்றனர்.
தொடங்கிய ஷூட்டிங்: தடைப்பட்டிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தை பக்ரீத் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் வெங்கட் பிரபு மும்முரமாக பணியாற்றிவருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் விஜய் டபுள் ஆக்ஷன் என்றும்; டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாவதாகவும் ஒரு தகவல் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் மேஜிக்: இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பதற்கான காரணங்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். கடைசியாக விஜய்க்கு அவர் புதிய கீதை படத்துக்கு இசையாமித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்களாக விஜய்க்கு இசையமைக்கவில்லை. தற்போது GOAT படத்தில் இசையமைப்பதால் கண்டிப்பாக இசையில் யுவன் ஷங்கர் ராஜா பெரிய மேஜிக் செய்வார் என்று விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
லேட்டஸ்ட் அப்டேட்: இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை ஜூன் அல்லது ஜூலையில் ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் மார்ச் மாதம் வெளியிடப்படலாம் என்றும்; அந்தப் பாடலை விஜய்யுடன் சேர்ந்து இளையராஜா பாடியிருக்கிறார் என்றும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
யுவன் பேச்சு: முன்னதாக படம் குறித்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, "படம் பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டேன். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சீக்கிரமே ஆரம்பமாகவிருக்கின்றன. அப்போது அனைத்து அப்டேட்களும் ரசிகர்களுக்கு முறையாக கிடைக்கும். இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு இருக்கும் என தெரியும். அதே அளவுதான் எனக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அனைத்தும் நன்றாக போய்க்கொண்டிருக்கின்றன" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











