கையில் ஏராளமான படங்கள்.. இளையராஜா பயோபிக் நிலைமை என்ன?.. தனுஷ் எடுத்திருக்கும் முடிவு இதுவா?
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார்.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்னப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினர். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறக்க முடியாதது.

தொட்டதெல்லாம் ஹிட்: இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
அவ்வளவு பிஸி: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே ஏராளம் வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.
1500 படங்கள்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். அவர் மீது விமர்சனங்கள் பல வந்தாலும் எந்தவிதமான ரியாக்ட்டையும் அவர் செய்துகொள்வதில்லை.
இளையராஜா பயோபிக்: சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கை வரலாறு படமாக மாறுகிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். சில மாதங்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. ஆனால் அதற்கு பிறகு படத்தின் வேலைகள் தொடங்கப்படவே இல்லை. எனவே இளையராஜா பயோபிக் என்னவாயிற்று என்று ரசிகர்கள் பலரும் கேள்வியை எழுப்பிய சூழலில் இப்போது படம் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்: அதாவது தனுஷ் இப்போது குபேரா படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார். மேலும் ஹிந்தி படம் ஒன்றிலும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்தப் படங்களை முடித்துவிட்டு இளையராஜா பட வேலைகளை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருக்கும் அவர்; டிசம்பர் மாதம் தொடங்குவதாக இருந்த இளையராஜா பயோபிக் ஷூட்டிங்கை மேலும் சில மாதங்கள் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











