என்னது இது சூர்யாவுக்கு வந்த சோதனை... கங்குவாவுக்கு இப்படி ஒரு பிரச்னையா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி சிவாவுக்கு பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் சூர்யாவின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் கங்குவா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால் அவருக்கு அந்தப் படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. ஞானவேல் ராஜா தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படமானது வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Here are the New Details about Suriyas Kanguva


பெரும் எதிர்பார்ப்பு: சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சூர்யாவின் கரியரில் முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.

க்ளிம்ப்ஸ்: சிவா இயக்கத்தில் சூர்யா கமிட்டட் என்று செய்தி வெளியானதும் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஏனெனில் இதற்கு முன்னதாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் அவர்கள் கண் முன் வந்துபோனது. ஆனால் தன் மேல் சந்தேகப்பட்டவர்களுக்கு கங்குவா க்ளிம்ப்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது.

என்ன கதை: கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

இரண்டு பாகங்கள்: மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்க்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கங்குவா பிஸ்னெஸ்: இதற்கிடையே கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கங்குவா படத்திலிருந்து புதிய போஸர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. சூழல் இப்படி இருக்க கங்குவா படத்தின் வியாபாரம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, கங்குவா படத்தின் ஓடிடி உரிமம், சேட்டிலைட் உரிமம் ஆகியவை படக்குழு எதிர்பார்த்தபடி பெரிய தொகைக்கு போகவில்லை என்றும்; அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, கங்குவா படத்துக்காக சூர்யா உச்சக்கட்ட உழைப்பை கொடுத்திருப்பதாகவும்; சில காட்சிகளை பார்த்து பிரமித்துபோனதாகவும் ஜோதிகா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X