ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் படம்.. சூர்யாவின் ரோல் என்ன தெரியுமா?.. அதே ஃபார்முலாவோ
சென்னை:சூர்யா நடிப்பில் கடைசியாக கங்குவா திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அடுத்ததாக அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில்தான் கோவையில் தொடங்கியது. இதில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சூர்யாவை வைத்து சிவா கங்குவா படத்தை இயக்கினார். அந்தப் படம் கடந்த மாதம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான படம் ரசிகர்களை ஏமாற்றியது. மேலும் படத்தை ரசிகர்கள் வைத்து செய்துவிட்டார்கள். 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று சொன்ன ஞானவேல் ராஜா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.அவரது பேச்சுதான் கங்குவாவின் தோல்விக்கு முதல் காரணம் என ரசிகர்கள் ஓபனாகவே கூறினார்கள்.ஆனால் ஜோதிகாவோ விமர்சித்தவர்களை விமர்சனம் செய்திருந்தார்.

இன்ஸ்டா பதிவு: அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும்.
நெகட்டிவ் விமர்சனங்கள்: முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.
வேறு எதையும் செய்யவில்லை: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த போஸ்ட்டை அடுத்து பலரும் ஜோதிகாவையும் விமர்சித்தார்கள்.
ஆர்.ஜே.பாலாஜியுடன் படம்: இப்படி கங்குவா படம் சூர்யாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்திவிட்டது. இந்தப் படத்துக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அவர். அதில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. இந்நிலையில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார் சூர்யா. அந்தப் படம் ஹிட்டானது. எனவே அந்த செண்ட்டிமெண்ட்படி இந்தப் படமும் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











