இனி சரிப்பட்டு வராது.. விடாமுயற்சி படம் குறித்து அஜித் எடுத்த அதிரடி முடிவு இதுவா?
சென்னை: விடாமுயற்சி படத்துடைய ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அதில் அஜித், திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித் ஒரு முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதோடு சரி; படத்திலிருந்து வேறு எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜர்பைஜான் ஷூட்டிங்: அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்வரை அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்தது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்தனர். மங்காத்தா படத்துக்கு பிறகு அஜித் - திரிஷா - அர்ஜுன் கூட்டணி இதில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். படத்தின் ஷூட்டிங்கின்போது மிலனின் உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.
முதல் ஷெட்யூல் ஓவர்: அஜித் அஜர்பைஜானிலிருந்து சென்னை வந்து மீண்டும் அங்கு சென்று நடித்துக்கொடுத்தார். ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு காரணம்; எக்கச்சக்க செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிய காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
அடுத்தது எங்கே: தற்போது படக்குழு சென்னையில் இருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் துனுஷியாவில் நடக்கலாம் என்றும்; அஜர்பைஜானில் சொதப்பியது போல் துனிஷியாவில் சொதப்பக்கூடாது என்று மகிழ் திருமேனியிடம் லைகா தரப்பு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுஒருபுறமிருக்க அஜித் ரசிகர்களோ விடாமுயற்சி அப்டேட் கேட்டு போராடவும் செய்தனர்.
புதிய தகவல்: இதற்கிடையே அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விடாமுயற்சி ஷூட்டிங்கை தொடங்குவதில் லைகா தொடர்ந்து இழுத்தடிப்பதாகவும்; இதனால் கடுப்பான அஜித்குமார், விடாமுயற்சி ஷூட்டிங்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்குங்கள்; தொடங்கும்போது சொல்லுங்கள் வருகிறேன்; நான் அடுத்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி குட் பேட் அக்லியில் நடிக்கவிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











