தளபதி 69 கதை.. ஹெச்.வினோத்திடம் விஜய் சொன்னது இதுவா?.. தரமான சம்பவம் லோடிங்கோ
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. .இந்தச் சூழலில் ஹெச்.வினோத் மற்றூம் விஜய் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
செப்டம்பரில் ரிலீஸ்: கோட் படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது, இப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. மங்காத்தா படம் போல் இந்தப் படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்றும் பேசிக்கொள்கிறார்கள் அவர்கள். படத்தின் ட்ரெய்லரானது நாளை மாலை வெளியாகவிருக்கிறது.
தளபதி 69: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவிருக்கிறது. இதனையொட்டி அரசியலுக்கான அத்தனை முன்னெடுப்புகளையும் அவரும், அவரது கட்சியினரும் இப்போதே எடுக்கவிருக்கிறார்கள்.மேலும் அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார்.
உறுதி செய்த வினோத்: அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதனை சமீபத்தில் அவர் உறுதியும் செய்திருந்தார். தற்கால தலைமுறை இயக்குநர்களில் ஹெச்.வினோத் தனித்து இருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதேபோல் இந்தப் படம் அரசியல் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது அரசியல் படமாக இருக்காது; பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று வினோத் தெரிவித்திருக்கிறார்.
விஜய் சொன்ன வார்த்தை: இந்நிலையில் இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஹெச்.வினோத் தனது கதையை விஜய்யிடம் சொல்லிய பிறகு, கதை சூப்பரா இருக்கிறது. எனது கடைசி படத்துக்கு ஏத்த கதையாக இருக்கிறது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிச்சயம் வினோத் விஜய்யை வைத்து தரமான சம்பவத்தை செய்யப்போகிறார் என்று தளபதி ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











