விஜய் சொன்ன நோ?.. கோபித்துக்கொண்ட சன் நிறுவனம்?.. கூட்டணி உடைய இதுதான் காரணமா?
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் சூழலில்; கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் நிறுவனம் வாங்காததற்கு காரணமாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
செப்டம்பரில் ரிலீஸ்: கோட் படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது, இப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால் இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். முக்கியமாக மங்காத்தா படம் போல் இந்தப் படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்றும் பேசிக்கொள்கிறார்கள் அவர்கள்.
இரண்டு பாடல்கள்: படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசை என்பதாலும்; பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு அவர் இசையமைப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கின்றன. இரண்டாவது பாடல் விஜய்யின் குரலில் மெலோடியாக வந்தாலும் அதுவும் பெரிதாக கவரவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
உடைந்த கூட்டணி: இதற்கிடையே கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சாட்டிலைட் உரிமையை முதலில் சன் நிறுவனம்தான் வாங்குவதாக இருந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் உரிமையை தாங்கள் வாங்க வேண்டுமென்றால்; விஜய் சன் டிவிக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சன் தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டதாகவும்; அதற்கு விஜய் நோ சொல்லிவிட்டதால்; சாட்டிலைட் உரிமையை வாங்கும் முடிவிலிருந்து சன் நிறுவனம் பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சர்கார், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பீஸ்ட் படத்துக்காக சன் டிவியில் விஜய்யை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேட்டி ஒன்றும் எடுத்திருந்தார். அந்தப் பேட்டி அப்போது பயங்கர பாப்புலர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











