Ajith - திமுகவுடன் ஏற்பட்ட பிரச்னை.. அஜித்துக்கு யாருமே சப்போர்ட் செய்யவில்லையா?.. பரபர தகவல்
சென்னை: அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. விடாமுயற்சியை பொறுத்தவரை அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக வேறு லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் ஜோராக நடந்து முடிந்தது. அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்து தற்போது அடுத்த லொக்கேஷன் தேடும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.
ஒதுங்கிய அஜித்: அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய வேலை படத்தில் நடிப்பது மட்டும்தான். அதை தவிர்த்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. அதேபோல் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் ஈடுபடுவதில்லை. கடைசியாக அவர் அசல் படத்துக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவுடன் பிரச்னை: இதற்கிடையேபாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜித், இதுமாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சொல்லி எங்களை மிரட்டுகிறார்கள் ஐயா என கருணாநிதியிடம் நேரடியாக கூறியதும் அதற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். அஜித்தின் அந்தப் பேச்சு அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போதே அந்தக் கட்சியை அஜித் எதிர்த்துவிட்டாரே என்று பலரும் பேசினார்கள்.
யாரும் ஃபோன் எடுக்கவில்லை: அதேசமயம் அஜித் அப்படி பேசிய மறுநாள் கோபாலபுரம் சென்று ரஜினியுடன் கலைஞர் கருணாநிதியை சந்தித்தார். இந்நிலையில் இதுகுறித்து பரபர தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது மேடையில் அப்படி பேசி முடித்ததும் அஜித் சில நடிகர்களுக்கு ஃபோன் செய்தாராம். ஆனால் அஜித்துடன் தொடர்பு வைத்தால் நமக்கும் பிரச்னை வந்துவிடுமோ என்று அவர்கள் ஒதுங்கினார்களாம். அதனை அஜித் எதிர்பார்க்கவே இல்லையாம். முக்கியமகா மற்ற நடிகர்களுக்கும் சேர்த்துதானே பேசினோம். ஆனால் அவர்கள் இப்படி செய்கிறார்களே என்று வெக்ஸ் ஆகித்தான் ஒட்டுமொத்தமாக மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











