Ajith - என்னை மாதிரியே இருக்காரு.. அஜித்தை புகழ்ந்த விஜயகாந்த்.. மூத்த பத்திரிகையாளர் ஷேரிங்ஸ்

சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். பல உதவிகளை செய்திருக்கும் அவர் நடிகராக மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் உடல்நலக்குறைவால் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கும் சரி; நினைவிடத்துக்கும் சரி அஜித் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க தலைவர்: நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பேற்று அதனையும் திறம்பட கையாண்டார். கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை அவர்தான் அதிலிருந்து மீட்டார். மேலும் அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர், மலேசியா சென்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார் அவர். அதுமாதிரி இன்றுவரை ஒன்று நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Here are the Unknown details about Ajith And Vijayakanth


அரசியல் என்ட்ரி: நடிகர், நடிகர் சங்க தலைவர் என பிஸியாக இருந்த அவர் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் இடையில் அவர் எடுத்த சில தவறான முடிவுகள், உடல்நலக்குறைவு ஆகியவை காரணமாக சறுக்கலை சந்தித்தார். பிறகு அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

விஜயகாந்த்தின் கரங்கள் ஏகப்பட்ட பேருக்கு உதவியிருக்கின்றன அந்த உதவியின் காரணமாக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அதிகம் பேர் இருக்கிறார்கள். அந்த செலிபிரிட்டிகளில் ஒருவர்தான் விஜய். விஜய் மட்டுமின்றி சூர்யா, ஷாம் என பலருக்கும் பிரச்னை வந்தபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி தன்னால் முடிந்த உதவியை செய்துகொடுத்தவர். ஹீரோக்களை மட்டும் கவனிக்காமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்காகவும் அவர் பல உதவிகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் வரவில்லை: இதற்கிடையே விஜயகாந்த் உயிரிழந்தபோது அவரது உடலுக்கு விஜய் உள்ளிட்ட நடிகர்களும், சில நாட்கள் கழித்து அவரது நினைவிடத்துக்கு சூர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் அஜித்குமாரோ இதுவரைக்கும் விஜயாகாந்த்தின் நினைவிடத்துக்கு செல்லவில்லை. அதேசமயம் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இறந்ததற்கு சென்றார். அதை யாரும் விமர்சிக்காவிட்டாலும் விஜயகாந்த்துக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

பத்திரிகையாளர் பேட்டி: இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் அமலான் என்பவர் விஜயகாந்த் - அஜித் விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அஜித்குமார் ஈகோ பிடித்த நபர்தான். இத்தனை பேர் சொல்லி நாம் கேட்க வேண்டுமா என்ற மனநிலையில்கூட விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஜித் செல்லாமல் இருந்திருக்கலாம். நான் கடவுள் பிரச்னையில் அஜித்துக்கு விஜயகாந்த் உதவவில்லை என்று பேச்சு எழுந்திருக்கிறது.

என்னை மாதிரியே: ஆனால் அதெல்லாம் பொய். நடிகர் சங்க கடனுக்காக ஏன் அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சில குறிப்பிட்ட தொகையை கொடுத்தாலே கடனை அடைக்கலாம் என்று சொல்லி; தன் பங்காக பத்து லட்சும் ரூபாயை விஜயகாந்த்திடம் கொடுத்துவிட்டு கிளம்பினார். அந்த விஷயம் விஜயகாந்த்தை கவர்ந்துவிட்டது. உடனே தனது அருகே இருந்தவரிடம், என்னை மாதிரியே அஜித் இருக்காருப்பா என்று புகழ்ந்தார்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X