பிரசாந்த்துக்கும் விக்ரமுக்கும் எந்த சண்டையும் இல்லை.. அவங்க அப்பாக்களுக்குள்தான்.. பெண்தான் காரணமா?
சென்னை: பிரசாந்த 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். முக்கியமாக இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விக்ரமின் உறவுக்காரர் பிரசாந்த் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இருவருக்கும் கடந்த பல வருடங்களாகவே பிரச்னை இருந்தது என்ற பேச்சு எழுந்தது உண்டு. இந்தச் சூழலில் அதுகுறித்து திரை விமர்சகர் சிவபாலன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின.

திருடா திருடா: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார்.

சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு. ஒருவழியாக இப்போது அந்தகன் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது.
விக்ரமின் உறவினர்: இதற்கிடையே பிரசாந்த்தின் நெருங்கிய உறவினர் நடிகர் விக்ரம். அவர் இப்போது தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அதிலும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள்கூட விக்ரமின் ரசிகர்களாக இருப்பார்கள். அவரது நடிப்பில் கடைசியாக நேற்று தங்கலான் திரைப்படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. முன்னதாக விக்ரமுக்கும், பிரசாந்த்துக்கும் கடந்த பல வருடங்களாகவே பிரச்னை இருந்ததாக கூறப்பட்டுவந்தது.

சிவபாலன் பேட்டி: இந்நிலையில் அதுகுறித்து திரை விமர்சகர் சிவபாலன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பிரசாந்த்துக்கும் விக்ரமுக்கும் நேரடியாக எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் விக்ரமின் தந்தைக்கும், பிரசாந்த்தின் தந்தைக்கும்தான் பிரச்னை. விக்ரமின் தந்தைதான் கில்லி படத்தில் திரிஷாவின் தந்தையாக நடித்தவர். அவர் பரமக்குடியிலிருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர். அவரும் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனும் நெருங்கிய நண்பர்கள். அவர் தியாகராஜனின் அக்காவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அது தியாகராஜனுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் பெரிய பிரச்னை எல்லாம் இல்லை. என்னவென்றால் என்ன என்னும் அளவில்தான் அவர்களது உறவு இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











