Ajith - தொலைதூரத்திலிருந்து ஆசை ஆசையாய் வந்த ரசிகர்.. வாசலோடு துரத்திவிட்ட அஜித்?

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக அதே உற்சாகத்தோடு அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்திருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அவர். தடையறத்தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கின்றனர். அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ரொம்பவே மும்முரமாக நடந்துவருகிறது. அஜித்தும் முழு ஒத்துழைப்பை கொடுத்துவருகிறார்.

Here are the Unknown Side Form Ajithkumar Journalist Anthanan Shares a video

என்ன கதை?: இப்படத்தில் அஜித்தும், திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும்; அவர்கள் இருவரும் ஒரு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்வார்கள் அப்போது திரிஷா கடத்தப்பட்டுவிடுவார். அவரை அஜித் மீட்பதுதான் ஒன்லைன் என்கிறார்கள் கோலிவுட்டினர். மகிழ் திருமேனி திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்பதால் கண்டிப்பாக பக்கா ஆக்‌ஷன் படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரெடி என்று இப்போதே கூறிவருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்த படம்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக பரவிவருகிறது. அதன்படி திரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் இன்று அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் ஒன்று ஓடியது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

அந்தணன் வீடியோ: சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளர் அந்தணன் சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் வாருங்கள் அஜித்தை புறக்கணிப்போம் என்று கூறியிருந்தார். அதற்கு காரணமாக சில விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்றுதான் அவர் ரசிகர்களைக்கூட மதிக்கவே இல்லை என்பது. உதாரணமாக வீடு தேடி வந்த ரசிகர் ஒருவரை வாசலோடு அஜித் திருப்பி அனுப்பினார் என்றும் குறிப்பிட்டிருந்தது. அந்தணனின் வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்தது.

அந்த ரசிகர் யார்: இந்நிலையில் அந்தணன் குறிப்பிட்ட அந்த ரசிகர் அவருக்கு ஃபோன் செய்திருக்கிறார். அப்போது பேசிய அவர், "நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட ஒருவருக்கா ரசிகராக இருக்கிறோம் என்று வெட்கப்படுகிறேன். எனது திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்க பெங்களூரிலிருந்து ஆசை ஆசையாக அஜித் வீட்டுக்கு சென்றேன். ஆனால் அஜித் வீட்டு செக்யூரிட்டிக்கூட அழைப்பிதழை வாங்கவில்லை. அங்கிருந்து என்னை வெளியே போங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக வீட்டு வாசலில் பத்திரிகையை வைத்துவிட்டு சென்றேன்" என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X