பிரசாந்த் கோல்டு டவர்ஸ் முதல் அடுக்குமாடி கட்டடங்கள்.. டாப்பில் இருக்கும் டாப் ஸ்டார்

சென்னை: நடிகர் பிரசாந்த் கோலிவுட்டில் டாப்பில் இருந்தவர். ரசிகர்களால் டாப் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட அவர் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் போன்ற முக்கிய இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தவர். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இப்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார்.

நடிகரும், இயக்குநருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த். 1990ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பிரசாந்த்தை மருத்துவர் ஆக்கிவிட வேண்டுமென்பதுதான் தியாகராஜனின் தீராத ஆசை. ஆனால் வாழ்க்கை நாம் நினைத்தபடி அனைத்தையும் கொடுத்துவிடுவதில்லையே. பிரசாந்த்துக்கு சினிமா வாய்ப்பை கொடுத்தது. முதல் படமே அதிரிபுதிரி ஹிட். படம் ஹிட்டானது மட்டுமின்றி பிரசாந்த்தின் அழகும், நடிப்பும் பலரது கவனத்தை ஈர்த்தது.

Here is the Details about Actor Prashanth Net Worth

தொடர் வாய்ப்புகள்: வைகாசி பொறந்தாச்சு படத்தின் வெற்றிக்கு பிறகு பிரசாந்த்துக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தன. இரண்டாவது படமே பாலுமகேந்திரான் இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படம். அந்தப் படமும் ஹிட்டடிக்க பம்பரமாய் சுழல ஆரம்பித்தார் பிரசாந்த். அதனையடுத்து உனக்காக பிறந்தேன், எங்க தம்பி, திருடா திருடா, செந்தமிழ் செல்வன், ஆணழகன் என அவர் நடித்த படங்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் 90களில் இளம் கதாநாயகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார் டாப் ஸ்டார் பிரசாந்த்.

விஜய், அஜித் எல்லாம் பின்னால்தான்: தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக இருக்கும் விஜய்யும், அஜித்த்தும் பிரசாந்த் டாப்பில் இருந்தபோதுதான் சினிமாவுக்குள் அறிமுகமானார்கள். அவர்கள் அறிமுகமானபோது எல்லாம் பிரசாந்த் எட்ட முடியாத உயரத்தில் இருந்தார். தொட்டதெல்லாம் ஹிட்டானது. முக்கிய இயக்குநர்களின் பார்வைகள் அனைத்தும் பிரசாந்த்தின் பக்கமே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

கூடிய கூட்டம்: பிரசாந்த்தின் ஒரு பட வெற்றி விழாவுக்குள் விஜய் நுழைய முடியாமல் இருந்தார்; அதேபோல் ஊட்டியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது பிரசாந்த்தை பார்த்ததும் அஜித்திடம் நின்றிருந்த கூட்டத்தினர் உடனடியாக பிரசாந்த்தை பார்க்க சென்ற சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின. இப்படி யாராலும் அசைக்க முடியாத இடத்தில்தான் டாப் இருந்தார் இருந்தார்.

சரிந்த பிரசாந்த்: ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் அவரது திரை சாம்ராஜ்ஜியத்தை அசைத்து பார்த்தது. ஆட்டம் கண்ட சாம்ராஜ்ஜியம் ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டது. அதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தெலுங்கு படத்தில் சைடு ரோலில் நடித்தார். இப்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார். இதன் மூலம் பல வருடங்கள் கழித்து தமிழில் அவர் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த்தின் சொத்து மதிப்பு: இந்நிலையில் பிரசாந்த்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் பீக்கில் இருந்தபோதே தான் சம்பாதித்ததை பல தொழில்களில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கியிருக்கிறார். சென்னையில் பல அடுக்குமாடி கட்டடங்கள் பிரசாந்த்துடையதே. முக்கியமாக பிரசாந்த் கோல்டு டவர்ஸ் என்ற ஒன்றில்தான் ஜாய் ஆலுக்காஸ் உள்ளிட்ட நகைக்கடைகள் இயங்கிவருகின்றன. மொத்தம் பிரசாந்த்துக்கு 90 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X