Vijayakanth - ஓடி ஓடி உதவிய விஜயகாந்த்.. அவரது தம்பிக்கு இந்த நிலைமையா?.. என்ன புதுசு புதுசா கெளம்புது
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் விஜயகாந்த்தின் தம்பி குறித்த புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன இது இப்படி ஒரு தகவல் பரவிவருகிறதே என்று சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
புரட்சி கலைஞர், கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். மதுரையை பூர்வீகமாகக்கொண்ட அவர் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை சந்தித்து சினிமாவில் பெரிய ஹீரோவாக மாறினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் பீக்கில் இருந்தபோது விஜயகாந்த்தும் சரசரவென முன்னேறி பெரிய ஹீரோவாக மாறினார். அது அப்போதைய திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக சி செண்டரில் விஜயகாந்த்தின் படங்களுக்கு பயங்கரமான மவுசு இருந்தது.

அரசியல் என்ட்ரி: 150 படங்கள்வரை நடித்திருக்கும் விஜயகாந்த் தனக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கின் காரணமாகவும், அவரது மண்டபம் இடிக்கப்பட்டதாலும் அரசியலில் நுழைந்தார். பிறகு விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக ஆனார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு ஏற்பட்ட சில துரோகங்களால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
உடல்நலக்குறைவு: அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வில் இருந்தார். அவ்வப்போது தொண்டர்களை சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தார். நிலைமை இப்படி இருக்க அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உதவும் குணம்: அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உச்சக்கட்ட சோகத்தில் தள்ளியது. லட்சக்கணக்கானோர் சென்னைக்கு படையெடுத்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் உயிரிழந்தாலும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார். ஏனெனில் அவரால் உதவி பெற்றவர்கள் பல பேர் அவரை நினைத்துக்கொண்டே இருப்பார்கள். சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை விஜயகாந்த்தால் உதவி பெற்றவர்கள் ஏராளம். இந்த சூழலில் விஜயகாந்த்தின் தம்பி குறித்து ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
விஜயகாந்த்துக்கு பால்ராஜ் மற்றும் செல்வராஜ் என்ற இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். இவர்களில் செல்வராஜ் மதுரையில் பிளாஸ்டிக் வியாபாரம் செய்துவருவதாக கூறப்படுகிறது. நடிகர், அரசியல்வாதி என்ற பன்முகத்தன்மை கொண்ட விஜயகாந்த் தனது அண்ணனாக இருந்தாலும் செல்வராஜ் ரொம்பவே எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துவந்ததாக சொல்லப்படுகிறது.
முக்கியமாக விஜயகாந்த் அரசியலில் நுழைந்தாலும் அவரிடம் செல்வராஜ் பெரிதாக எதையும் எதிர்பார்க்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் இப்போது ஏழ்மையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. ஆனால் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











