Dhanush - யாருக்கும் மரியாதையே இல்லை.. கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் உச்சக்கட்ட வேதனையில் தனுஷ்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஒரு வெற்றி படத்தை கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் தனுஷ். தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
தமிழின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடந்த சில வருடங்களாகவே வெற்றிக்கு காத்திருந்தார். அப்படி காத்திருந்தவருக்கு திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அந்த வெற்றியை தக்க வைக்காத தனுஷ் அடுத்து நடித்த வாத்தி படத்தில் அதனை கோட்டை விட்டார். இதனால் ஒரு வெற்றியை கொடுக்கும் தீவிரமான முனைப்பில் இருக்கிறார் அவர். இந்த சூழலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

கேப்டன் மில்லர்: ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவ அருண் மாதேஸ்வரன். அவருடன் தனுஷ் முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதில் தனுஷுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பீரியட் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது.
கடும் போட்டி: இந்த பொங்கலுக்கு கடுமையான போட்டி நிலவிவருகிறது. கேப்டன் மில்லருக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படமும் வெளியாகிறது. தனுஷால்தான் சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் வந்தவர். தற்போது இரண்டு பேரின் படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் இந்த ரேஸில் யார் வெல்வார் என்ற ஆவல் ரசிகர்களிடையே உருவாகியிருக்கிறது.
தனுஷ் பேச்சு: இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பேசிய தனுஷ், "கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் மாதேஸ்வரன் வைத்திருக்கும் டேக் லைன், 'Respect is Freedom'என்பதுதான். அதாவது மரியாதைதான் சுதந்திரம். ஆனால் இங்கு மரியாதை எதற்கு இருக்கிறது, யாருக்கு இருக்கிறது. யாருக்கு சுதந்திரம் இருக்கிறது என்று தெரியவில்லை. எதை செய்தாலும் யோசித்து யோசித்து செய்ய வேண்டியதாக உள்லது.
குறை சொல்ல கூட்டம்: அப்படியே யோசித்து பேசினாலும் செய்தாலும்; அது நல்லதாகவே இருந்தாலும் அதை குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது. சின்ன கூட்டம்தான் அது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. குறை சொல்லிவிட்டு, கை காட்டிக்கொண்டு இருப்பதுதான் சுதந்திரமா என்ன?.. அது சுதந்திரம் கிடையாது. சுதந்திர துஷ்பிரயோகம்.
கடவுள் முடிவு செய்யட்டும்: அவன் நல்லவன், இவன் கெட்டவன், அது உனக்கு, இது எனக்கு என்று ஏன் சொல்கிறீர்கள். கடவுள் முடிவு செய்யட்டுமே.அப்போது பார்த்துக்கொள்ளலாம். எது எதற்காகவோ ஓடுகிறோம். ஆட்டமாக ஆடுகிறோம். நம்முடைய முதன்மை தேவை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது இதற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லாமல் போகும். என்னுடைய முதன்மை தேவை என்ன என்பதில் நான் தெளிவாக இருந்தேன். கேப்டன் மில்லர் ஒரு சர்வதேச படமாக இருக்கும். புதிதான் முறையில் இந்தப் படத்தை அருண் ட்ரை செய்திருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
ஆடியோ லான்ச்: முன்னதாக, கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் இயக்குநர் மாரி செல்வராஜும் கலந்துகொண்டார். இசை வெளியீட்டு விழாவில் கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது மறைவுக்கு தனுஷ் நேரில் செல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்திருந்த சூழலில் அவர் தனது இசை வெளியீட்டு விழாவில் தனது அஞ்சலியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











