Simbu - அட சிம்புவின் வேற லெவல் பிளான் இதுவா?.. 50ஆவது படத்தில் தரமான சம்பவம் காத்திருக்கிறதோ?
சென்னை: நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இரட்டை வேடங்களில் நடிக்கும் சிலம்பரசன் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் மெகா ப்ளாக்பஸ்டரை கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சிம்பு மீண்டும் இயக்குநர் ஆகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
எஸ்டிஆர், அட்மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் ட்ராப்?: படத்தின் அறிவிப்பு வெளியானதோடு அதற்கு பிறகு எந்தவிதமான மூவ்மெண்ட்டும் தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவேளை படத்தை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கும் படக்குழு எந்த பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்துவந்தது. அதனையும் கவனித்த ரசிகர்கள், அவ்ளோதான் எஸ்டிஆர் 48 முடிந்துவிட்டதுபோல என்று உறுதியாகவே சமூகவலைதளங்களில் ஓபனாக பேச ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
மீண்டும் இயக்குநர்: இந்நிலையில் சிம்பு பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சிம்பு தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படம் மன்மதன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு திரைக்கதையில் மன்மதன் படம் வெளியானது. ஜோதிகா, கவுண்டமணி உள்ளிடோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











