Ajith - முதலில் அதை செய்யுங்கள்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கண்டிஷன் போட்டாரா அஜித்குமார்?

சென்னை: அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தற்கால இயக்குநர்களில் கவனத்தை ஈர்த்திருக்கும் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கிவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

Here is the New details about Ajith And Adhik Movie

முடிந்த ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து விடாமுயற்சி படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு அப்டேட்டை வெளியிட்டது லைகா. அதன்படி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என நொந்துகொண்டனர். சூழல் இப்படி இருக்க அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்த படம்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில வாரங்களாக பரவிவருகிறது. அதன்படி திரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் திரைத்துறையில் முணுமுணுப்பு எழுந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இருந்தாலும் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் அதனை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் திரைத்துறையினர். நேர்கொண்ட பார்வையில் நடித்தபோது அஜித்துடன் ஆதிக்கிற்கு நல்ல பழக்கம் ஏற்பட்டதாகவும்; அதனைத் தொடர்ந்து அவர் சொன்ன கதையை அஜித் ஓகே செய்துவிட்டாராம். இந்நிலையில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்: அதன்படி இந்தப் படம் வழக்கமான அஜித் படம் போல் சீரியஸாக இல்லாமல் காமெடி ஜானரில் உருவாகவிருக்கிறதாம். இதில் எஸ்.ஜே.சூர்யா, அரவிந்த் சாமி, தபு உள்ளிட்டோர் நடிக்கலாம் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் ஆதிக்கை அழைத்த அஜித்குமார், கதாபாத்திரங்களைவிடவும் கதைக்கு வலிமை தேவை. மல்டி ஸ்டாரர் படமாக இது வர வேண்டும் என்றால் நிச்சயம் மற்ற நடிகர்களுக்கும் சரியான ஸ்பேஸ் இருக்க வேண்டும். எனவே எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த சொல்லி அட்வைஸ் செய்திருக்கிறாராம்.

100 கோடி ரூபாய் இயக்குநர்: ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி படம் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்தது. அதன் காரணமாக கவனம் பெற்ற இயக்குநராக மாறிவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். எனவே அஜித்தை வைத்து அவர் இயக்கப்போகும் படமும் 100 கோடி ரூபாய் க்ளப்பில் சேர வேண்டும் என்று ஏகே ரசிகர்கள் விருப்பப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X