GOAT - விஜய்யின் GOAT படத்தில் விஜயகாந்த்தும் இருக்கிறாரா?.. உச்சக்கட்ட ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.
விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
டைம் ட்ராவல்: இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோ கமாண்டோ ட்ரெஸ்களில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில்கூட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி ட்ரெண்டானது.அதில், விஜய்யும் பிரசாந்த்தும் வாக்குவாதம் செய்வதுபோல் காட்சிகள் இருந்தன.
விஜயகாந்த்: இந்நிலையில் GOAT படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் கேரக்டரை கொண்டு வர வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டதாகவும்; அதற்கு விஜய்யும் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் விஜயகாந்த் GOAT படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அட்டகாசமான சண்டை காட்சிகளில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
விஜய், விஜயகாந்த் உறவு: விஜய் தன்னுடைய கரியரின் ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவரை வைத்து செந்தூரப்பாண்டி படத்தை இயக்கினார் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்த சமயத்தில் பீக்கில் இருந்த விஜயகாந்த் எஸ்.ஏ.சிக்காக செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். படமும் ஹிட்டானது. விஜய்க்கு மட்டுமின்றி நடிகர் சூர்யாவுக்கு உதவும் விதமாகவும் பெரியண்ணா படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications