Thalapathy 68 - தளபதி 68 அப்டேட்.. இவானாவுக்கு பதில் வெங்கட் பிரபு களமிறக்கிய நடிகை இவரா?

சென்னை: Thalapathy 68 (தளபதி 68) விஜய் நடித்து வரும் தளபதி 68 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இதனால் விஜய் கொஞ்சம் அப்செட்தான். இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது படம். இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார்.

Here is the new update from Thalapathy 68 Movie

தளபதி 68: அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனத்துக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பூஜையானது லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மல்டி ஸ்டாரர்: படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. முதல் நாள் ஷூட்டிங்காக பிரசாத் ஸ்டூடியோவில் வைத்து ஒரு பாடல் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா நடனம் ஆடியதாக தெரிகிறது.

வெளிநாட்டில் ஷூட்டிங்: அந்தப் பாடலை முடித்துவிட்டு நேராக தாய்லாந்து சென்றது படக்குழு. அங்கு சில ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனையடுத்து சென்னை திரும்பி குட்டி ரெஸ்ட் எடுத்துவிட்டு அடுத்ததாக துருக்கிக்கு சென்றிருக்கிறது. படமானது டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிவருவதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. மேலும் படத்துக்கான டைட்டிலை புத்தாண்டு அன்று வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.

இவானா: இந்த சூழலில் இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க லவ் டுடே படத்தின் ஹீரோயின் இவானாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும்; அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கும் சூழலில் தங்கையாக நடித்தால் அதேபோன்ற கதாபாத்திரம்தான் கிடைக்கும் என அவர் நினைத்துதான் வெளியேறிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகிறது.

இவானாவுக்கு பதில்: இந்நிலையில் தளபதி 68 படத்தில் இவானா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு இன்னொரு ஹீரோயினை நடிக்க வைக்கப்போவதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி சுந்தர்.சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த மாளவிகா ஷர்மாதான் அந்த நடிகை என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X