Vijay - அஞ்சலியை காதலித்த விஜய்.. தளபதி என்னவெல்லாம் செஞ்சிருக்காரு பாருங்க.. நண்பர் சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு படத்தை இயக்கிவருகிறார். பெரும் பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜுடன் அவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஷங்கும் விஜய்யை வைத்து ஒரு படம் செய்யும் எண்ணத்தில் இருப்பதாகவும் திரைத்துறையினர் கூறுகின்றனர்.

விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் கலெக்‌ஷன் ரீதியாக பட்டையை கிளப்புகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களும் கூறுகின்றன.

Here is the Unknown Details from Actor Vijay Says His Friend Srinath

லியோவும் அப்படியே: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருக்கின்றனவாம். அதனால் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக ஏறியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது.

GOAT: அந்தவகையில் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக விஜய்க்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லபடுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் விஜய்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் 150 கோடி ரூபாய் எல்லாம் வாய்ப்பே இல்லை என்று திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.

அடுத்த படம்: GOAT படத்தை முடித்துவிட்டு தனது 69ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை விஜய் யாருக்கு கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவருகிறது. இச்சூழலில் அந்த வாய்ப்பை கார்த்தி சுப்புராஜ் தட்டி சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில்கூட, ஏற்கனவே விஜய்யிடம் கதை சொல்லி மிஸ் ஆகிவிட்டது. இந்த முறை கண்டிப்பாக மிஸ் ஆகாது என்று ஆணித்தரமாக் கூறினார் கார்த்திக்.

ஜேசன் படம்: விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்யும் லைகா பேனரில் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அந்தப் படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாக தொடங்கும். இதற்கிடையே விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகளுடன் லண்டனில் வசிக்கிறார். அதற்கு, விஜய்யுடன் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுதான் காரணம் என்று பரவலாக பேச்சு ஓடுகிறது.

ஸ்ரீநாத் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து அவரது நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தளபதி குறித்து பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது அஞ்சலி என்ற பெண்ணின் மீது விஜய்க்கு காதல் இருந்தது. ஆனால் அந்தப் பெண் விஜய்க்கு சீனியர். விஜய்க்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த கல்லூரிக்கும் பிடித்த பெண்ணாகத்தான் அஞ்சலி இருந்தார்.

அழகான பெண்: அந்த அளவுக்கு அவர் அழகான பெண். விஜய் ஜூனியர் என்பதால் அந்தப் பெண் தன்னை அழைத்து ராகிங் செய்ய வேண்டும் என்றெல்லாம் காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அது நடக்கவே இல்லை. தற்போது இந்த விஷயத்தை விஜய்யும் மறந்திருப்பார். அஞ்சலியும் மறந்திருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X