இன்று சிம்புவுக்கு மட்டும் அல்ல 'ஹீரோ' சிவகார்த்திகேயனுக்கும் பிறந்தநாள்
சென்னை: சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அவரின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் பெரிய திரைக்கு வந்தார். இந்த பையன் எல்லாம் ஹீரோவா என்று விமர்சித்தவர்கள் கண் முன்பு அசுர வளர்ச்சி அடைந்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகியுள்ளார் சிவா.
மெரினா படம் ரிலீஸாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிவிட்டது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் ஹீரோவாகி 7 ஆண்டுகள் ஆனதை #7YrsOfPrinceSKism என்ற ஹேஷ்டேகுடன் ட்வீட்டி வருகிறார்கள் ரசிகர்கள். அதனால் அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.
கொண்டாட்டம்
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து அவரின் ரசிகர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.
அஜித்
மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயனுக்கு தல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர்
நடிகராக பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் இன்று தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என்று புதுப்புது அவதாரங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











