24 மணி நேரமும் போதை.. சிம்பு பாட்டுக்கு ரீல்ஸ் வீடியோ போட்ட ஸ்ரீ.. லோகேஷ் கண்டுகொள்வாரா?

சென்னை: திரையுலகில் திறமை இருந்தும் வெற்றி பெற முடியாத நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இதில் அப்பாஸ் முதல் துள்ளுவதோ இளமை அபினய் வரை எண்ணற்ற நடிகர்கள் ஒரு சில படங்களில் மக்களிடையே பிரபலம் அடைந்தாலும் காணாமல் போனவர்கள் ஏராளம். அதே பாணியில் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் பிரபலமைடந்த ஸ்ரீ புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்ணீர் விடாத குறையாக புலம்பி தவிக்கின்றனர். உண்மையில் அவருக்கு என்னதான் ஆச்சு என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது.

கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் ஸ்ரீ. ஆனால், இவரது முழுப்பெயர் ஸ்ரீராம் நடராஜன் . சினிமாவில் நடிப்பதற்காக தனது பெயரை ஸ்ரீ என மாற்றிக்கொண்டார். தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆன படம் வழக்கு எண் 18/9. இவர் நடித்த முதல் படமே தேசிய விருதுகளை குவித்தது. பட விழாக்களில் விருதுகளை மட்டும் அல்லாமல் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தின் மூலம் ஸ்ரீ என்ற திறமையான நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை கிடைத்தன. இதைத்தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்தார். இப்படமும் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்தது.

hero-sris-video-starring-in-the-movie-maanagaram-goes-viral

இன்று இந்திய அளவில் பாராட்டுதலை பெற்று வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம். இப்படத்திலும் ஸ்ரீ ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து இறுகப்பற்று படத்தில் நடித்தார். நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவை எதுவும் நிறைவேறவில்லை. சென்னை லயோலா கல்லூரியில் விஸ்வல் கம்யூனிகேஷன் படித்தவர். இயக்குநராக ஆசைப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்: இந்நிலையில், ஸ்ரீயின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீயா இது என கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். அவர் மீது பேரன்பு கொண்டவர்கள் என்ன ஆச்சு ப்ரோ உங்களுக்கு. பட வாய்ப்பு கிடைக்காமல் இப்படி ஆகிவிட்டார் என்றும் பலர் கூறுகின்றனர். நல்ல கதைகளை வைத்திருப்பதாகவும், இயக்குநராக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஸ்கிரிப்ட் நிறைய வைத்துள்ளார் என்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பலரும் அவர் மீது பேரன்புடன் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

hero-sris-video-starring-in-the-movie-maanagaram-goes-viral

போதைக்கு அடிமை: நடிகர் ஸ்ரீ பட வாய்ப்புகள் குறைந்ததால் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் உடல் மெலிந்து காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். சினிமாவை தவிற எதுவும் தெரியாமல் இருக்கக் கூடாது. எந்த நேரமும் போதையில் இருந்தால் நன்றாகவா இருக்கும் என்றும் கமெண்ட் தெரிவிக்கின்றனர். மேலும், சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற என்னம்மா பண்ணலாம் என்ற பாடலை பாடியபடி ஒரு வீடியோ இடம்பெற்றிருக்கிரது. இதில், ஸ்ரீயின் முடி கலரிங் செய்தபடி உள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கல் ஷாக் ஆகியுள்ளனர். உண்மையில் அவர் போதையில் இருக்கிறார். போதை மருந்துக்கு அடிமையானதால் தான் இவரது உடலில் இவ்வளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். ஆனாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நண்பர்களை காக்க முன் வர வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X