ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ஹீரோக்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக முடிந்து விட்டது 2002.

சூப்பர் ஸ்டார்களான ரஜினிக்கும், கமலுக்கும் இது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்த ஆண்டு.

பாபா. ரஜினியின் திரையுலக வரலாற்றில் அவரால் மறக்கவே முடியாத அளவுக்கு பலவிதமான கசப்பான அனுபவங்களைக் கொடுத்த படம்.ஒவ்வொரு நாளும் பாபா குறித்து ஏதாவது ஒரு செய்தி கசிந்து கொண்டே இருந்தது. அந்த அளவுக்கு என்னதான் படத்தில் இருக்கிறது என்று நினைத்துப்படத்தைப் பார்க்க போனவர்கள், ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்ததே மிச்சமானது.

நல்ல கதைகளுக்கு மட்டுமே வரவேற்பு கொடுப்பார்கள் தமிழ் ரசிகர்கள் என்பதை பாபாவின் தோல்வி சரியாக நிரூபித்தது.

அதேபோல, கமல்ஹாசனுக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக இல்லை. பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம் ஆகிய இரண்டு படங்களும் 100 நாட்கள்வரை ஓடினாலும் தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் பெரும் வெற்றிப் படங்களாக அமையவில்லை.

கமல், ரஜினி தவிர மற்ற ஹீரோக்களுக்கும் இது சொல்லிக் கொள்ளும்படியான ஆண்டாக இல்லை. திக்கித் திணறி ஆளுக்கு ஒரு வெற்றிப் படங்கள்தான் கிடைத்தன. விஜயகாந்த்திற்கு ரமணாவும், விக்ரமுக்கு ஜெமினியும், விஜய்க்கு பகவதியும், அஜீத்திற்கு வில்லனும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து,பிரசாந்த்திற்கு தமிழ் என்று தலா ஒன்று தான் தேறியது.

சரத்குமார் 2002ல் சமஸ்தானம், தென்காசிப் பட்டணம் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டுமே ஊத்திக் கொண்டன.

அஜீத்தின் ரெட், ரஜினியின் பாபா, விஜயகாந்த்தின் ராஜ்ஜியம், தேவன், சரத்குமாரின் சமஸ்தானம், விக்ரமின் கிங், சூர்யாவின் ஸ்ரீ ஆகிய படங்கள் 2002ல் சூப்பர்டூப்பர் பிளாப் பட்டியலில் சேர்ந்தன.

2002ல் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள்:

  • ரஜினிகாந்த் - பாபா.
  • கமல்ஹாசன் - பம்மல் கே.சம்பந்தம், பஞ்ச தந்திரம்.
  • விஜயகாந்த் - தேவன், ராஜ்ஜியம், ரமணா.
  • விஜய் - யூத், தமிழன், பகவதி.
  • அஜீத் - ராஜா, ரெட், வில்லன்.
  • விக்ரம் - கிங், சாமுராய், ஜெமினி.
  • மாதவன் - கன்னத்தில் முத்தமிட்டால், ரன்.
  • சூர்யா - உன்னை நினைத்து, ஸ்ரீ, மெளனம் பேசியதே.
  • பிரசாந்த் - தமிழ், விரும்புகிறேன்.
  • சரத்குமார் - தென்காசிப் பட்டணம், சமஸ்தானம்.
  • ஸ்ரீகாந்த் - ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X