For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கோலிவுட்: டாப் 5 ஹீரோக்கள் தமிழின் டாப் 5 ஹீரோக்கள் வரிசையில் (வாங்கும் சம்பளம், குவிக்கும் வசூல்) முதலிடத்தில் தொடர்ந்து நின்று ஆட்சி புரிவதுரஜினிதான் என்கிறது கோடம்பாக்கம். இந்த டாப் ஹீரோக்கள் வரிசையில் கடைசிக்கு கொஞ்சம் முதலிடத்தில் இருக்கிறார்கமல்ஹாசன்.ரஜினியின் மார்க்கெட் தமிழகத்தோடு சுருங்கிவிடுவதில்லை என்பது அவரது ஸ்பெஷாலிட்டி. கேரளா, ஆந்திரா, கர்நாடகா,மற்றும் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என தமிழர்கள் பரவிக் கிடக்கும் இடங்களில் எல்லாம் ரஜினியின் படங்கள் செம வசூல்பார்த்து விடுகின்றன.இது தவிர ஜப்பானில் இவருக்கு என அதிசயமான ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதும் பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும் இவரதுபடத்தின் செலவை ரிலீசான ஒரே வாரத்தில் திரும்பி எடுத்துவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படி ஒரு வசூல் ராஜா ரஜினி.சந்திரமுகியின் வரலாறு காணாத வசூல் மூலம் சிவாஜி பிலிம்ஸ் அடுத்தடுத்து பிரமாண்டமான படங்களுக்கு பூஜை போடரெடியாகிவிட்டது. அந்த அளவுக்கு படம் வாரிக் குவித்துவிட்டது.இந்தப் படத்தால் ரஜினிக்குக் கிடைத்த லாபமும் ரூ. 40 கோடியை ஈசியாக தாண்டும் என்கிறார்கள். சிவாஜி பிலிம்சும் ரூ. 30கோடிக்குக் குறைவில்லாமல் ஈட்டிவிட்டது.இதனால் கோலிவுட்டின் இப்போதும் நம்பர் ஒன் ஹீரோவாக ரஜினியே நீடிக்கிறார்.விஜய்: ரஜினிக்கு அடுத்தபடியாக நோகாமல் நொங்கு குடிப்பது விஜய்தான்.விக்ரம், சூர்யா, கமல் எல்லாம் உடலை வாட்டிக் கொண்டு உருவத்தை மாற்றி படாதபாடு பட்டு நடித்து வெற்றிகளை ஈட்ட,இன்னும் ஆக்ஷன், கும்தலக்கடி டான்ஸ், கொஞ்சம் காமெடி என்று நிரந்தரமாக ஒரு பார்முலாவைப் பிடித்துக் கொண்டு ஆச்சரியவெற்றிகளைத் தருபவர் விஜய்.படம் ரிலீஸ் ஆன தினத்தில் தியேட்டர்களில் திருவிழா களையை ஏற்படுத்தும் ஆற்றல் விஜய்க்கு உண்டு. நகர்ப் பகுதி, கிராமப்பகுதி என்று பாகுபாடே இல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் எல்லா சென்டர்களிலும் சரியான ஓப்பனிங் உண்டு இவருக்கு.கேரளா, கர்நாடகத்திலும் நல்ல மார்க்கெட் உள்ளதால் கோலிவுட்டின் அடுத்த வசூல் ராஜா இவர் தான். நல்ல எரியாவின்படத்தின் வினியோக உரிமையையும் கூடவே ரூ. 7 கோடி வரை சம்பளத்தையும் வாங்கிக் கொள்ளும் விஜய்யின் படங்கள் எடுத்தயாரும் நஷ்டப்பட்டதில்லை.விக்ரம்: விஜய்க்கு அடுத்த நிலையில் இருப்பது விக்ரம். ஆக்ஷன், நடிப்பு என ரஜினியும் கமலும் கலந்து செய்த கலவை மாதிரி கலக்கிக்கொண்டிருக்கும் விக்ரமின் கால்ஷீட் கேட்டு நிற்கும் தயாரிப்பாளர்களின் வரிசை மிக நீளம்.நகர்ப் பகுதிகளில் இவரது படங்களுக்கு முதல் வாரத்தில் கிடைக்கும் வரவேற்பு மிக அலாதியானது. அந்த வாரத்திலேயேபடத்தின் செலவும் ஒட்டுமொத்தமாக திரும்பி வந்துவிடும்.வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் முதல் நாளில் இருந்தே லாபம் கிடைக்கச் செய்யும் படங்கள் இவருடையவை.சி சென்டர்களில் இன்னும் விக்ரமுக்கு கிரிப் கிடைக்கவில்லை. ஆனால், நகர்ப் பகுதிகளில் ஏ,பி சென்டர்களில் இவர் தான் ராஜா.இப்போது ஆந்திராவிலும் இவரது படங்கள் வசூல் மழையை கொட்ட ஆரம்பித்துவிட்டன.படத்துக்கு ரூ. 4 கோடி வரை வாங்கும் இவர் ஒழுங்காக வருமான வரி கட்டிவிடுவதாக சொல்கிறார்.கமல்: ரஜினி-கமல் என்ற வரிசையில் பேச்சு இருந்தாலும் வசூலிலும் சம்பளத்திலும் இருவரும் ஏணி வைத்தாலும் எட்டாது என்ற நிலைதான் உள்ளது.எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது திமுக தலைவர் கருணாநிதியின் பொதுக் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் கூடும். ஆனால்,ஒட்டு மட்டும் கிடைக்காது. அது மாதிரி, கமலின் படங்களுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கொட்டும். ஆனால், அதற்கு தகுந்தமாதரி வசூல் இருந்ததில்லை.சமீபத்தில் விருமாண்டி மட்டுமே விதிவிலக்கு. மற்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வசூல் குவித்ததில்லை. இவரது சம்பளம்ரூ. 5 கோடி என்றாலும் வசூலில் 4வது இடத்தில் தான் இருக்கிறார் கமல்.கமல் படத்துக்கு சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை மற்றும் பெங்களூர் ஆகிய சிட்டி சென்டர்களில் முதல் வாரத்தில் நல்லவசூல் இருக்கும். மற்ற இடங்களில் சுமார் தான்.தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்யும் கலைஞன் கமல் மட்டுமே.சூர்யா: விக்ரம் மாதிரி சமீப காலத்தில் விடுவிடுவென மேலே வந்துவிட்டவர் சூர்யா. அதற்குக் காரணம் கடும் உழைப்பு, உழைப்பைத்தவிர வேறில்லை.அஜீத், பிரஷாந்த் போன்றவர்கள் நிரப்பி வந்த இந்த டாப்-5வில் கடைசி இடத்தை இப்போது சூர்யா பிடித்துவிட்டார்.நந்தாவில் ஆரம்பித்த சூர்யாவின் வெற்றிப் பயணம் கஜினி மூலம் எங்கேயோ போய்விட்டது. தமிழில் மட்டுமல்லாமல்ஆந்திராவிலும் வசூலை வாரிக் குவித்துவிட்டதால் சூர்யாவின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கிறது.கஜினிக்குப் பிறகு தான் சம்பளத்தை ரூ. 2 கோடியாக்கி இருக்கிறார். அதுவும் கூட ரொம்ப யோசித்துத் தான். இன்னும் கூடகொட்டிக் கொடுக்க ஆட்கள் தயாராக இருந்தாலும் வாய் பிளக்க சூர்யா தயாராக இல்லை. பண விஷயத்தில் இவர் இன்னொருசிவக்குமார். மிக நிதானமான, நேர்மையான ஆசாமி.சூர்யாவின் இன்னொரு பலம், அவருக்குக் கிடைத்திருக்கும் ரசிகைகள். தமிழ் ஹீரோக்களிலேயே இப்போது அதிகபட்ச பெண்ரசிகைகள் கொண்ட ஹீரோ சூர்யா தான் என்கிறது ஒரு சர்வே.ஏ சென்டர்களிலும் பி சென்டரிலும் சூர்யாவின் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் உள்ளதால் டாப் 5வில் இடம் பிடித்திருக்கிறார்.அஜீத், பிரஷாந்த், மாதவன்: இந்த டாப் 5 பட்டியலில் ஒரு காலத்தில் இடம் பிடித்திருந்தவர்கள் தலை அஜீத், தம்பி பிரஷாந்த், மேடி என்ற மாதவன்.இதில் பிரஷாந்த் ஒரே மாதிரியாக எல்லா படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டுக்கு தானே தீ வைத்துக் கொண்டவர்.அஜீத் சும்மா இருக்காமல் ஆக்ஷன் காட்டுகிறேன் என்று தடம் மாறியவர். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அதைகவனிக்காமல், கார் ரேஸ் பக்கம் போய் பணத்தையும் மார்க்கெட்டையும் இழந்தவர். ஆனால், போராட்டத்துக்குப் பேர் போனஅஜீத், மீண்டும் தன்னை நிரூபிக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. பரமசிவன் படத்துக்காக தனது எடையை பாதிக்குப் பாதி குறைத்து, வயசையும் குறைத்துக் கொண்டு நச் என்று நிற்கிறார். தலைஎழுந்திருக்க வாய்ப்பு தெரிகிறது.ஆனால், மேடி என்ற மாதவன் சாக்லேட் பாய் என்ற இமேஜை உடைக்க, மேஜைகளை எல்லாம் உடைத்து ஆக்ஷன் காட்ட,தியேட்டரே சிரித்து சிரித்து இவரை சீனா தானா ஆக்கிவிட்டது. மேலும் சம்பள விஷயத்தில் ரூ. 1 கோடிக்கு சல்லிக் காசு குறைக்கமாட்டேன் என்று அடம் பிடித்தால் தலையில் செல்ப்பாகவே பைன் சேன்ட் போட்டுக் கொண்டவர்.இந்த மூவரை விடவும் சிம்புவுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அதே போல நல்ல மார்க்கெட் வைத்திருந்த தனுஷ் தொடர்தோல்விகளால் பாதாளத்தில் இருக்கிறார். அவரைத் தூக்கிவிடும் வேலைகள் நடக்கின்றன. இப்படி மார்க்கெட் ஏற்ற, இறக்கமே இல்லாமல் தினமும் காலையில் கண் விழித்தவுடன், காபி குடித்துவிட்டு ஏதாவது ஒருபடத்தின் சூட்டிங்குக்கு கிளம்பிப் போய்க் கொண்டே இருப்பவர் சத்யராஜ்.தனது மார்க்கெட் குறையக் குறைய சம்பளத்தையும் குறைத்துக் கொண்டே வருபவர். இதனால், கை நிறைய படங்கள். வருடம்முழுவதும் வேலை என்று மனிதர் மகா பிஸி..பிஸி..

  By Staff
  |
  தமிழின் டாப் 5 ஹீரோக்கள் வரிசையில் (வாங்கும் சம்பளம், குவிக்கும் வசூல்) முதலிடத்தில் தொடர்ந்து நின்று ஆட்சி புரிவதுரஜினிதான் என்கிறது கோடம்பாக்கம். இந்த டாப் ஹீரோக்கள் வரிசையில் கடைசிக்கு கொஞ்சம் முதலிடத்தில் இருக்கிறார்கமல்ஹாசன்.

  ரஜினியின் மார்க்கெட் தமிழகத்தோடு சுருங்கிவிடுவதில்லை என்பது அவரது ஸ்பெஷாலிட்டி. கேரளா, ஆந்திரா, கர்நாடகா,மற்றும் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என தமிழர்கள் பரவிக் கிடக்கும் இடங்களில் எல்லாம் ரஜினியின் படங்கள் செம வசூல்பார்த்து விடுகின்றன.

  இது தவிர ஜப்பானில் இவருக்கு என அதிசயமான ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதும் பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும் இவரதுபடத்தின் செலவை ரிலீசான ஒரே வாரத்தில் திரும்பி எடுத்துவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படி ஒரு வசூல் ராஜா ரஜினி.

  சந்திரமுகியின் வரலாறு காணாத வசூல் மூலம் சிவாஜி பிலிம்ஸ் அடுத்தடுத்து பிரமாண்டமான படங்களுக்கு பூஜை போடரெடியாகிவிட்டது. அந்த அளவுக்கு படம் வாரிக் குவித்துவிட்டது.

  இந்தப் படத்தால் ரஜினிக்குக் கிடைத்த லாபமும் ரூ. 40 கோடியை ஈசியாக தாண்டும் என்கிறார்கள். சிவாஜி பிலிம்சும் ரூ. 30கோடிக்குக் குறைவில்லாமல் ஈட்டிவிட்டது.

  இதனால் கோலிவுட்டின் இப்போதும் நம்பர் ஒன் ஹீரோவாக ரஜினியே நீடிக்கிறார்.

  விஜய்:

  ரஜினிக்கு அடுத்தபடியாக நோகாமல் நொங்கு குடிப்பது விஜய்தான்.

  விக்ரம், சூர்யா, கமல் எல்லாம் உடலை வாட்டிக் கொண்டு உருவத்தை மாற்றி படாதபாடு பட்டு நடித்து வெற்றிகளை ஈட்ட,இன்னும் ஆக்ஷன், கும்தலக்கடி டான்ஸ், கொஞ்சம் காமெடி என்று நிரந்தரமாக ஒரு பார்முலாவைப் பிடித்துக் கொண்டு ஆச்சரியவெற்றிகளைத் தருபவர் விஜய்.

  படம் ரிலீஸ் ஆன தினத்தில் தியேட்டர்களில் திருவிழா களையை ஏற்படுத்தும் ஆற்றல் விஜய்க்கு உண்டு. நகர்ப் பகுதி, கிராமப்பகுதி என்று பாகுபாடே இல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் எல்லா சென்டர்களிலும் சரியான ஓப்பனிங் உண்டு இவருக்கு.

  கேரளா, கர்நாடகத்திலும் நல்ல மார்க்கெட் உள்ளதால் கோலிவுட்டின் அடுத்த வசூல் ராஜா இவர் தான். நல்ல எரியாவின்படத்தின் வினியோக உரிமையையும் கூடவே ரூ. 7 கோடி வரை சம்பளத்தையும் வாங்கிக் கொள்ளும் விஜய்யின் படங்கள் எடுத்தயாரும் நஷ்டப்பட்டதில்லை.

  விக்ரம்:

  விஜய்க்கு அடுத்த நிலையில் இருப்பது விக்ரம். ஆக்ஷன், நடிப்பு என ரஜினியும் கமலும் கலந்து செய்த கலவை மாதிரி கலக்கிக்கொண்டிருக்கும் விக்ரமின் கால்ஷீட் கேட்டு நிற்கும் தயாரிப்பாளர்களின் வரிசை மிக நீளம்.

  நகர்ப் பகுதிகளில் இவரது படங்களுக்கு முதல் வாரத்தில் கிடைக்கும் வரவேற்பு மிக அலாதியானது. அந்த வாரத்திலேயேபடத்தின் செலவும் ஒட்டுமொத்தமாக திரும்பி வந்துவிடும்.

  வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் முதல் நாளில் இருந்தே லாபம் கிடைக்கச் செய்யும் படங்கள் இவருடையவை.

  சி சென்டர்களில் இன்னும் விக்ரமுக்கு கிரிப் கிடைக்கவில்லை. ஆனால், நகர்ப் பகுதிகளில் ஏ,பி சென்டர்களில் இவர் தான் ராஜா.இப்போது ஆந்திராவிலும் இவரது படங்கள் வசூல் மழையை கொட்ட ஆரம்பித்துவிட்டன.

  படத்துக்கு ரூ. 4 கோடி வரை வாங்கும் இவர் ஒழுங்காக வருமான வரி கட்டிவிடுவதாக சொல்கிறார்.

  கமல்:

  ரஜினி-கமல் என்ற வரிசையில் பேச்சு இருந்தாலும் வசூலிலும் சம்பளத்திலும் இருவரும் ஏணி வைத்தாலும் எட்டாது என்ற நிலைதான் உள்ளது.

  எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோது திமுக தலைவர் கருணாநிதியின் பொதுக் கூட்டங்களுக்கு பெரும் கூட்டம் கூடும். ஆனால்,ஒட்டு மட்டும் கிடைக்காது. அது மாதிரி, கமலின் படங்களுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கொட்டும். ஆனால், அதற்கு தகுந்தமாதரி வசூல் இருந்ததில்லை.

  சமீபத்தில் விருமாண்டி மட்டுமே விதிவிலக்கு. மற்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வசூல் குவித்ததில்லை. இவரது சம்பளம்ரூ. 5 கோடி என்றாலும் வசூலில் 4வது இடத்தில் தான் இருக்கிறார் கமல்.

  கமல் படத்துக்கு சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை மற்றும் பெங்களூர் ஆகிய சிட்டி சென்டர்களில் முதல் வாரத்தில் நல்லவசூல் இருக்கும். மற்ற இடங்களில் சுமார் தான்.

  தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்யும் கலைஞன் கமல் மட்டுமே.

  சூர்யா:

  விக்ரம் மாதிரி சமீப காலத்தில் விடுவிடுவென மேலே வந்துவிட்டவர் சூர்யா. அதற்குக் காரணம் கடும் உழைப்பு, உழைப்பைத்தவிர வேறில்லை.

  அஜீத், பிரஷாந்த் போன்றவர்கள் நிரப்பி வந்த இந்த டாப்-5வில் கடைசி இடத்தை இப்போது சூர்யா பிடித்துவிட்டார்.

  நந்தாவில் ஆரம்பித்த சூர்யாவின் வெற்றிப் பயணம் கஜினி மூலம் எங்கேயோ போய்விட்டது. தமிழில் மட்டுமல்லாமல்ஆந்திராவிலும் வசூலை வாரிக் குவித்துவிட்டதால் சூர்யாவின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கிறது.

  கஜினிக்குப் பிறகு தான் சம்பளத்தை ரூ. 2 கோடியாக்கி இருக்கிறார். அதுவும் கூட ரொம்ப யோசித்துத் தான். இன்னும் கூடகொட்டிக் கொடுக்க ஆட்கள் தயாராக இருந்தாலும் வாய் பிளக்க சூர்யா தயாராக இல்லை. பண விஷயத்தில் இவர் இன்னொருசிவக்குமார். மிக நிதானமான, நேர்மையான ஆசாமி.

  சூர்யாவின் இன்னொரு பலம், அவருக்குக் கிடைத்திருக்கும் ரசிகைகள். தமிழ் ஹீரோக்களிலேயே இப்போது அதிகபட்ச பெண்ரசிகைகள் கொண்ட ஹீரோ சூர்யா தான் என்கிறது ஒரு சர்வே.

  ஏ சென்டர்களிலும் பி சென்டரிலும் சூர்யாவின் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் உள்ளதால் டாப் 5வில் இடம் பிடித்திருக்கிறார்.

  அஜீத், பிரஷாந்த், மாதவன்:


  இந்த டாப் 5 பட்டியலில் ஒரு காலத்தில் இடம் பிடித்திருந்தவர்கள் தலை அஜீத், தம்பி பிரஷாந்த், மேடி என்ற மாதவன்.

  இதில் பிரஷாந்த் ஒரே மாதிரியாக எல்லா படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டுக்கு தானே தீ வைத்துக் கொண்டவர்.

  அஜீத் சும்மா இருக்காமல் ஆக்ஷன் காட்டுகிறேன் என்று தடம் மாறியவர். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அதைகவனிக்காமல், கார் ரேஸ் பக்கம் போய் பணத்தையும் மார்க்கெட்டையும் இழந்தவர். ஆனால், போராட்டத்துக்குப் பேர் போனஅஜீத், மீண்டும் தன்னை நிரூபிக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.


  பரமசிவன் படத்துக்காக தனது எடையை பாதிக்குப் பாதி குறைத்து, வயசையும் குறைத்துக் கொண்டு நச் என்று நிற்கிறார். தலைஎழுந்திருக்க வாய்ப்பு தெரிகிறது.

  ஆனால், மேடி என்ற மாதவன் சாக்லேட் பாய் என்ற இமேஜை உடைக்க, மேஜைகளை எல்லாம் உடைத்து ஆக்ஷன் காட்ட,தியேட்டரே சிரித்து சிரித்து இவரை சீனா தானா ஆக்கிவிட்டது. மேலும் சம்பள விஷயத்தில் ரூ. 1 கோடிக்கு சல்லிக் காசு குறைக்கமாட்டேன் என்று அடம் பிடித்தால் தலையில் செல்ப்பாகவே பைன் சேன்ட் போட்டுக் கொண்டவர்.

  இந்த மூவரை விடவும் சிம்புவுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அதே போல நல்ல மார்க்கெட் வைத்திருந்த தனுஷ் தொடர்தோல்விகளால் பாதாளத்தில் இருக்கிறார். அவரைத் தூக்கிவிடும் வேலைகள் நடக்கின்றன.


  இப்படி மார்க்கெட் ஏற்ற, இறக்கமே இல்லாமல் தினமும் காலையில் கண் விழித்தவுடன், காபி குடித்துவிட்டு ஏதாவது ஒருபடத்தின் சூட்டிங்குக்கு கிளம்பிப் போய்க் கொண்டே இருப்பவர் சத்யராஜ்.

  தனது மார்க்கெட் குறையக் குறைய சம்பளத்தையும் குறைத்துக் கொண்டே வருபவர். இதனால், கை நிறைய படங்கள். வருடம்முழுவதும் வேலை என்று மனிதர் மகா பிஸி..பிஸி..


   Read more about: top 5 heroes of kollywood
   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X