ரஜினி, விஜய் வந்தும் மாறவில்லை.. நடிகைகள் ஏன் இப்படி இருக்காங்க.. வேதனையில் இருக்கும் காமெடி ஹீரோ!

சென்னை: திரையுலகில் நிறம் குறித்த பாகுபாடு, நடிகர்களின் முக தோற்றத்தை கேலி செய்வது போன்ற நிகழ்வுகள் அதிகமாகவே நடந்து வருகிறது. இதுபோன்ற அவமானங்களை நடிகைகளை விட நடிகர்கள் அதிகம் அனுபவித்துள்ளனர். குறிப்பாக காமெடியனாக கரியரை தொடங்கி ஹீரோவாக அசத்தி வரும் நடிகர்கள் சிலருக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. இந்நிலையில், பல நடிகைகள் தன்னுடன் நடிக்க மறுத்ததாக பிரபல காமெடி ஹீரோ மேடையிலேயே ஓப்பனாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, விஜய், முரளி, விஜயகாந்த் போன்ற நடிகர்கள் நிறத்தால் இருக்கும் வேறுபாட்டை உடைத்து சாதித்தவர்கள் தான். குறிப்பாக விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆன நாளைய தீர்ப்பு படத்தில் இடம்பெற்ற இவரது புகைப்படத்தை வைத்து பிரபல நாளிதழ் கிண்டல் செய்ததாகவும் விஜயின் அப்பா சந்திரசேகரே தெரிவித்திருந்தார். அதேபோன்று விஜயகாந்த் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் தோன்றி பின்னர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்து மறைந்தார். ஆரம்பக் காலகட்டத்தில் விஜயகாந்துடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் தயங்கியதாக அவரே சில பேட்டிகளில் தெரிவித்தார். அதற்காக நான் வருந்தவில்லை, படிப்படியாக உயர்ந்து இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்தார்.

heroines-rejects-offer-from-saptagiri-movies

நிறத்தை உடைத்த ரஜினி: ஆரம்ப காலகட்டத்தில் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த ரஜினி பிறகு ஹீரோவாக பைரவி படத்தில் அறிமுகம் ஆனார். அதற்கடுத்து ஏறுமுகம் தான், தோல்விகள் இருந்தாலும் இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக மிளிர்கிறார். பார்க்க கருப்பா பூனைக் கண்கள் வைத்திருக்கிறார். இவரெல்லாம் ஹீரோவா என ஏளனம் செய்தனர். பலருக்குள் பூட்டி கிடந்த நடிகன் என்ற ஆசையை தூண்டி விட்டவர் ரஜினிகாந்த். 80களில் ரஜினியை முன்னுதாரணமாக வைத்து பலரும் நடிகர்களாக அறிமுகமாகி வெற்றிகொடி நாட்டியுள்ளனர். ரஜினி இன்றைக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

சப்தகரி: தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அல்லு அர்ஜுன்போன்ற சூப்பர் ஸ்டார் படங்களில் காமெடியனாக நடித்து வந்த சப்தகிரி 2016இல் வெளியான சப்தகரி எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். முழுநீள காமெடி படமாக வெளியாகி ஹிட் ஆனது., அதைத்தொடர்ந்து அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் நடிகர் சுனில் எப்படி காமெடியனாக வந்து ஹீரோவாக கலக்கினாரோ அதேபோன்று ஆக்சன், பாட்டு, காமெடி என எல்லா சென்டர்களிலும் கலக்கி வருகிறார்.

heroines-rejects-offer-from-saptagiri-movies

தயக்கம் காட்டும் நடிகைகள்: ஹீரோவாக அறிமுகம் ஆனாலும், ஒரு சில படங்களில் காமெடியனாகவே தொடர்கிறார். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் பெல்லி காணி பிரசாத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. பெல்லி காணி பிரசாத் படத்தை அபிலாஷ் ரெட்டி கோபிடி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா ஷர்மா நடிக்கிறார். வரும் 21ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ஹீரோ ச்பதகிரி தன் மனதில் இருந்த பாரத்தை ஓவராக இறக்கி வைத்து விட்டார்.

படத்தில் நடிப்பதை காட்டிலும், நான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஹீரோயின்களை தேர்வு செய்வது தான் கடினமாக இருக்கிறது. புதுமுகங்கள், தென்படாத நடிகைகள் என பலர் என்னுடன் ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டார்கள். ஆனால், என்னுடன் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்ட பிரியங்கா ஷர்மாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை போன்று நகைச்சுவை நடிகராக வந்து ஹீரோவாக நடிப்பவர்கள் பல அவமானங்களை சந்த்திதுள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X