லப்பர் பந்து படத்துல ஹிப் ஹாப் ஆதி நடிக்க வேண்டியதா?.. கடைசியில ஒரே நாளில் இப்படியொரு கிளாஷ்!

சென்னை: ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியிருக்கும் லப்பர் பந்து படத்தில் முதலில் ஹிப் ஹாப் ஆதி தான் நடிக்க வேண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவின் நடித்த ஸ்டார் படத்தில் முதலில் கமிட் ஆனதே ஹரிஷ் கல்யாண் தான். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக இருந்து வெளியே வந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனை வைத்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் தான் ஸ்டார் படத்தை இயக்கினார்.

lubber pandhu hip hop aadhi kadaisi ulaga por

ஹரிஷ் கல்யாணை வைத்து ரஜினிகாந்த் போன்றும் கமல்ஹாசன் போன்றும் போஸ்டர்கள் வெளியான நிலையில், அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு கவின் உள்ளே நுழைந்தார்.

லப்பர் பந்து படத்தில் ஹிப் ஹாப் ஆதி?: மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு பதில் நான் தான் நடித்திருக்க வேண்டும் என அரவிந்த் சாமி சமீபத்திய பேட்டியில் கூறினார். சினிமாவில் இது சகஜமான ஒன்று தான். சாந்தனு நடிக்க வேண்டிய மகாராஜா அவரது கையை விட்டுச் சென்று விஜய் சேதுபதியிடம் கிடைத்து மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்த ஆண்டு மாறியது. அதே போல ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்க வேண்டிய படம் தான் லப்பர் பந்து என சில தகவல்கள் கசிந்துள்ளன.

lubber pandhu hip hop aadhi kadaisi ulaga por

லப்பர் பந்து படத்துடன் கிளாஷ்: லப்பர் பந்து படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்காத நிலையில், அந்த படத்துக்குப் போட்டியாக ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்திருக்கும் கடைசி உலகப் போர் படம் இன்று வெளியாகி இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் கதைக்களம் புதிதாக இருந்தாலும் ரசிகர்களுக்கு அந்த படத்தில் பல குழப்பங்கள் நிலவி வருவதால் பெரிதும் கைகொடுக்குமா என்பது சந்தேகம் தான் எனக்கூறுகின்றனர்.

மாறிய கூட்டணி: கடைசி உலகப் போர் படத்தில் நடித்த ஹிப் ஹாப் ஆதி மற்றும் நட்டி நட்ராஜ் தான் முதலில் லப்பர் பந்து படத்தில் நடித்திருக்க வேண்டும் என்றும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் அந்த படத்தில் மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றனர். பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூலை ஈட்டப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X