பட்டர்ஃபிளை மண்டையனா? காமெடியில் தெறிக்கும் ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் டிரைலர்!

சென்னை: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி உள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியே இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாதுரி எனும் மாடல் நடிகை நடித்துள்ளார்.

'பட்டர்ஃபிளை மண்டையன்' எனும் அடைமொழியுடன் ஹிப்ஹாப் தமிழா ஆதி காமெடியில் கலக்கி உள்ள அட்டகாசமான டிரைலர் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி சுந்தர். சி தயாரிப்பில் வெளியான மீசையை முறுக்கு படத்தை தானே எழுதி இயக்கி நடித்து ஹீரோவானார். ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு படத்தில் ஏகப்பட்ட யூடியூபர்கள் நடித்திருந்தனர்.

எல்லாமே ஹிட்

எல்லாமே ஹிட்

அந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி போட்ட எல்லா பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் வேற லெவலில் ஹிட் அடிக்க படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தை தொடர்ந்து இசையமைப்பதில் அதிக ஆர்வத்தை செலுத்தாமல் ஹீரோவாக நடிப்பதையே தொடர்ந்து வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.

இரண்டாவது படம்

இரண்டாவது படம்

இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் பெண்கள் ஹாக்கியை மையமாக வைத்து உருவான நட்பே துணை படத்தில் ஹீரோவாக நடித்து கலக்கினார் ஹிப்ஹாப் ஆதி. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனகா நடித்திருந்தார். மீசையை முறுக்கு அளவுக்கு சூப்பராக படம் ஓடவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது.

நான் சிரித்தால் ஓடவில்லை

நான் சிரித்தால் ஓடவில்லை

கடந்த ஆண்டு ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இயக்குநர் ராணா என்பவர் அந்த படத்தை இயக்கி இருந்தார். குறும்படம் ஒன்றின் கதையை பெரிய படமாக எடுத்திருந்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றியடையவில்லை.

மீண்டும் இயக்கம்

மீண்டும் இயக்கம்

நமக்கு நாமே துணை என்பது போல மீண்டும் தன் படத்தை தானே இயக்கி ஹிட் அடிக்க முடிவு செய்த ஹிப்ஹாப் ஆதி கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள் என தனி ஒருவனாக ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி இருக்கும் படம் தான் சிவகுமாரின் சபதம். அந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பட்டர்ஃபிளை மண்டையன்

பட்டர்ஃபிளை மண்டையன்

என் பேரனை ராஜா மாதிரி வளர்க்கப் போகிறேன் என பிறந்தவுடன் அவர் தாத்தா சொல்ல அந்த பேரனோ பட்டர்ஃபிளை மண்டையுடன் ரவுடி போல வளர்ந்து நிற்க அவனோட பட்டர்ஃபிளை காதலிக்காக என்ன என்ன செய்யப் போகிறான் எனும் கதையை மீசையை முறுக்கு ஸ்டைலில் செம காமெடி கலக்கலாக ஹிப்ஹாப் ஆதி எடுத்திருப்பார் என்கிற நம்பிக்கையை இந்த டிரைலர் தாராளமாக கொடுக்கிறது.

குட்டி சமந்தா

குட்டி சமந்தா

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக மாதுரி எனும் மாடல் நடிகை நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான சிவகுமார் பொண்டாட்டி பாடலிலேயே அவரது அழகை பார்த்த ரசிகர்கள் அவரை குட்டி சமந்தா என்றே கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பூமிகா படத்தில் இவர் அறிமுகமாகி இருந்தார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

சிவகுமாரின் சபதம் திரைப்படம் இம்மாதம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக டிரைலர் உடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர் தோல்விகளை இந்த படத்தின் மூலம் ஹிப்ஹாப் தமிழா ஆதி சரி செய்வார் என்றும் அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டைட்டில் சர்ச்சை

டைட்டில் சர்ச்சை

சிவகுமாரின் சபதம் என்கிற டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான சிவகுமார் பொண்டாட்டி பாடல் வரிகள் கோலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பின. நடிகர் சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமாரை கொச்சைப்படுத்தும் வகையில் இவை இருப்பதாக சூர்யா ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், காமெடி படமாகவே இந்த படம் இருக்கும் என்றும் எந்தவொரு சர்ச்சையும் இருக்காது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X