ஹாலிவுட் படத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு அழைப்பு!

பேராண்மையில் நடித்ததைத் தொடர்ந்து ரோலன்ட் கிக்கிங்கர் ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பராகிவிட்டார்.
தன் புதிய நண்பருக்கு சமீபத்தில் தனது வீட்டில் விருந்தளித்தார் ஜெயம் ரவி. விருந்து முடிந்து அவர் புறப்பட்டபோது, அவருக்கு வேட்டி-சட்டை, வலம்புரி சங்கு ஆகியவைகளை ஜெயம் ரவி பரிசாக அளித்தார்.
இந்தப் பரிசுகளைப் பார்த்து வியந்த கிக்கிங்கர், "நல்ல திறமையான நடிகராகவும், எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கும் தன்மையும் உள்ள உங்களைப் போன்றவர்கள்தான் ஹாலிவுட்டுக்கு தேவை. உண்மையிலேயே உங்களைப் போன்ற ஒருவரை எனக்குத் தெரிந்த பிரபல ஆங்கில இயக்குநர் தேடிக் கொண்டிருக்கிறார். நடிக்க வருகிறீர்களா?" என்று கேட்டார்.
உடனே யோசித்து சொல்வதாகக் கூறியுள்ளார் ரவி.
இருக்கிற இடத்தை விட்டுவிட்டால், திரும்பப் பிடிப்பது எத்தனை கஷ்டம் என்பது அவருக்கல்லவா தெரியும்!
Comments
ஜெயம் ரவி பேராண்மை ரோலண்ட் கிக்கிங்கர் ஹாலிவுட் hollywood jayam ravi peranmai roland kikinger villai


Click it and Unblock the Notifications