துரோகம் செய்தவர்களுக்கு பதிலடி.. சிவகார்த்திகேயன் அந்த மாதிரி ஆள்.. தொகுப்பாளினி சொன்ன சீக்ரெட்

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக கரியரை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயரம் தொட்டுள்ளார் சிவகார்த்திகேயன். நிதானமாக படங்களை செலக்ட் செய்து விஜய் இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனை பற்றி பிரபல தொகுப்பாளினி கூறியிருக்கும் விசயம் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருப்பதாக தெரிகிறது. இதை பார்த்து சிவகார்த்திகேயன இப்படிப்பட்டவரா என வியந்து பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், அப்படி என்ன செய்துவிட்டார் என்றும் கேள்வி கேட்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னரான சிவகார்த்திகேயன் பின்பு, அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அவர் தொகுத்து நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் போகிற போக்கில் கமெண்ட்களை அள்ளி தெளித்து விடுவார். கூட இருப்பவர்களும் வயிறு வலிக்க சிரிப்பார்கள். பின்னர், மெரினா படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன் அவர் முதல் படமே அனைவரது கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், காக்கி சட்டை என ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து ஹிட் நடிகராக மாறினார். அந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் என்ற விருதையும் தட்டி சென்றார் சிவகார்த்திகேயன்.

host-bhavana-spoke-openly-about-sivakarthikeyan

முன்னணி நடிகர்: தொடர்ந்து காமெடி படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சிவகார்த்திகேயன் சீரியஸான கதாப்பாத்திரங்களை ஏற்று கமர்ஷியல் படங்களுக்கு அடித்தளம் போட்டார். வேலைக்காரன் வரவேற்பை பெறாவிட்டாலும் நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றது. கடந்தாண்டு வெளியான அமரன் திரைப்படம் இவரது கரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது. நடிகர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த இப்படம் கடந்தாண்டின் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படமாக இருந்தது. சிவகார்த்திகேயன் கரியரில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படமும் இதுதான். கோட் படத்தில் விஜய் கொடுக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் பெறுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என மறைமுகமாகவே பேச தொடங்கினர்.

பழைய பெயர்கள்: சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் பெயர் பழைய படங்களின் பெயர்கள் என்ற விமர்சிக்கப்பட்டாலும், அந்த பெயர்களை கொண்டுள்ள படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்திருக்கின்றன. தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் படமும் சிவாஜி நடித்த பராசக்தி படத்தின் பெயரில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படம் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயரம் தொட்டிருக்கும் சிவகார்த்திகேயனை பற்றி நன்கு அறிந்த பிரல தொகுப்பாளினி ஒருவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

host-bhavana-spoke-openly-about-sivakarthikeyan

சிவகார்த்திகேயன் சாதாரண ஆள் இல்லை: விஜய் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயனுடன் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்கியுள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பற்றி கூறியுள்ளார். இதில், சிவகார்த்திகேயன் சாதாரண ஆள் இல்லைங்க. நாம நினைக்கிறத விட பயங்கர போராட்ட குணம் கொண்டவர். யாராவது அவருக்கு துரோகம் செய்தாலோ, வளர்ச்சியை தடுத்தாலும், அதையெல்லாம் சுக்கு நூறாக உடைத்தெறிந்து பல மடங்கு சாதனை செய்து விடுவார். பின்பு யார் அவருக்கு எதிரியாக அல்லது துரோகம் செய்தார்களோ அவர்களுடன் அன்பாக பழகுவார். இது தான் அவருடைய எதார்த்தமான குணம். இதை பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருக்கும். தனக்கு துரோகம் செய்தவர்களுக்கு இப்படித்தான் அவர் பதிலடி கொடுப்பார் என பாவனா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X