ஹாட் அப்டேட்.. ஜெயம் ரவியின் அடுத்த ஜோடி இவர் தான்!

சென்னை: கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்த பல படங்கள் லைனில் காத்திருக்கின்றன.

பூமி, பொன்னியின் செல்வன், ஜன கண மன படங்களை தொடர்ந்து மற்றும் ஒரு புதிய படத்திலும் நடிகர் ஜெயம் ரவி கமீட் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை வரலஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிட் 2019

ஹிட் 2019

இந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித் தந்துள்ளது. கோமாளி படத்தின் வெற்றி மட்டுமின்றி புதிய படங்கள் மற்றும் பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் மூலமாக அந்த கனவு நடிகர் ஜெயம் ரவிக்கு நிறைவேற உள்ளது. சங்கமித்ரா படத்தில் ராஜாவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

புதிய முயற்சி

புதிய முயற்சி

திரைக்கதைகளையும் இயக்குநர்களையும் தேர்வு செய்வதில் ஜெயம் ரவி வல்லவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் அவரது துடிப்பான நடிப்பு அந்த படத்தையும் நிச்சயம் ரசிக்க வைக்கும். பேராண்மை, வனமகன், டிக்டிக்டிக், பூமி, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல முயற்சிகளில் ஜெயம் ரவி இறங்கி வருகிறார்.

தனி ஒருவன் 2

தனி ஒருவன் 2

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அந்த படத்தின் அடுத்த பாகமான தனி ஒருவன் 2 படத்திற்காக ரசிகர்கள் வெயிட் செய்து வருகின்றனர். ஆனால், தனி ஒருவன் 2 படம் குறித்து இதுவரை அப்டேட் ஏதும் வரவில்லை.

புது ஜோடி

கோலிவுட்டில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

வரலக்‌ஷ்மி சரத்குமார்

வரலக்‌ஷ்மி சரத்குமார்

கடந்த ஆண்டு வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் அரை டஜனுக்கும் மேல் படங்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டு வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் நீயா 2 மட்டுமே வெளியானது. அந்த படத்திலும் அவருக்கு பெரிய அளவில் ரோல் இல்லை. இந்த நிலையில், ஜெயம் ரவியுடன் நடிக்கப் போகும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X