நவரச நாயகன் கார்த்திக் எப்படி திருமணம் செய்தார் தெரியுமா?.. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் அதிர்ச்சிதான்

சென்னை: முத்துராமனின் மகனான கார்த்திக் ரசிகர்களால் நவரச நாயகன் என்று கொண்டாடப்படுபவர். மிக சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த அவர் மொத்தம் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார். சோலைக்குயில் படத்தில் நடித்தபோது அதன் நாயகி ராகிணியை திருமணம் செய்துகொண்ட அவர்; தொடர்ந்து ராகிணியின் தங்கையையும் மனைவியாக்கிக்கொண்டார். இந்நிலையில் அவர் முதல் திருமணம் எப்படி செய்தார் என்பது குறித்து பார்க்கலாம்.

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக்கை பாரதிராஜா சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு, அழகு ஆகியவற்றால் அனைவரையும் ஈர்த்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார். அப்படி அவர் நடித்த மௌன ராகம், பொன்னுமணி, அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், அமரன் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து ரஜினி, கமல் ஆகியோருக்கே டஃப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதீத திறமை: கார்த்திக்கிற்கு அதீத திறமை உண்டு. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டாக செய்யக்கூடிய அவர்; எவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் சிங்கிள் டேக்கிலேயே முடித்துவிடக்கூடியவர். மௌன ராகம் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை அவர் அளவுக்கு அழகாக இன்னொருவரால் செய்திருக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். அதேபோல் ஏராளமான கேரக்டர்களை காலத்துக்கும் அழிக்க முடியாதபடி தனது நடிப்பால் நிலை நிறுத்தியவர் அவர்.

How Actor Navarasa Nayagan Karthik Secretly Married Actress Ragini During Solai Kuyil Shooting
Photo Credit:

சரிந்த மார்க்கெட்: எவ்வளவுக்கு எவ்வளவு திறமையை கொண்டு வளர்ந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகள், விமர்சனங்களையும் சந்தித்தவர் அவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வராதது, கால்ஷீட்டுகளில் குளறுபடி என அவரது செயல்கள் தொடர்ந்ததால் சட்டென அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சோலைக்குயில் படத்தில் நடித்தபோது அதன் நாயகி ராகிணியையும், சில வருடங்கள் கழித்து ராகிணியின் தங்கையையும் திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்த கதை: இந்நிலையில் ராகிணியை அவர் திருமணம் செய்த கதை குறித்து பார்க்கலாம். அதாவது சோலைக்குயில் படம் கோத்தகிரியில் நடந்திருக்கிறது. அப்போது வந்த கார்த்தி அதன் தயாரிப்பாளர் தமிழ்மணியிடம் நான் கொஞ்ச நேரம்தான் இருப்பேன் என்று சொல்ல; தமிழும் சரி என்று சொல்லியிருக்கிறார். அன்றைய தினம் பாடல் காட்சி ஷூட்டிங்காம். அப்போதுதான் ராகிணியை முதன்முறையாக பார்த்தாராம். பார்த்ததுமே காதலில் விழுந்திருக்கிறார்.

ரகசிய திருமணம்: கோரியோகிராஃபர் சுந்தரத்திடம் இன்னும் கொஞ்சம் ஷூட்டிங் செய்யுங்கள் என சொல்ல; ராகிணிக்காகத்தான் அவர் அந்த முடிவை எடுத்தார் என தயாரிப்பாளருக்கு சந்தேகம் வந்துவிட்டது. இது ஒருபக்கம் இருக்க திடீரென கோத்தகிரியில் மழை வெளுக்க சில நாட்கள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனே அங்கிருந்த கிராமத்தார்கள், ஒரு கோயிலை சொல்லி அங்கே பொங்கல் வைத்து படையல் நடத்தினால் மழை நின்றுவிடும் என கூறியுள்ளார்கள்.

பட்டு வேட்டி, பட்டு புடவையில்: அதனையடுத்து அதற்கான வேலைகளை காந்திமதி செய்திருக்கிறார். இதற்கிடையே ஏற்கனவே தங்கியிருந்த லாட்ஸ்ஸிலிருந்து இன்னொரு இடத்துக்கு கார்த்திக்கை ஷிஃப்ட் ஆக சொல்லியிருக்கிறார்கள் தயாரிப்பு தரப்பு. அதற்கு கார்த்திக்கோ ராகிணியும் என்னுடனேயே தங்கட்டுமே என சொல்ல; தயாரிப்பாளருக்கு சந்தேகம் மேலும் வலுத்திருக்கிறது. அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அந்தப் படையலுக்கு கார்த்திக்கும், ராகிணியும் பட்டு புடவை, வேட்டியில் வர; காந்திமதிக்கும் சந்தேகம் வந்துவிட்டதாம்.

இருந்தாலும் அவர்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. படையல் செய்தபோது வைக்கப்பட்ட பூக்களை, 'நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் பூஜை அறை பெரியது. எனவே அங்கே கொண்டு செல்கிறேன்' என ராகிணி எடுத்து செல்ல; கார்த்திக்கும் அமைதியாக ஆமோதித்திருக்கிறார். படையலை எல்லாம் முடித்துவிட்டு ராகிணியோடு சென்றவர்; அங்கு யாருக்கும் தெரியாமல் தாலி கட்டிவிட்டாராம். அடுத்த நாள் இன்னொரு பாடல் ஷூட்டிங்கிற்காக வரும்போது, கார்த்திக் கட்டிய தாலியை தனது இடுப்பில் கட்டி மறைத்திருந்தாராம் ராகிணி. பாடல் காட்சியை படமாக்கும்போது கலா மாஸ்டர் கண்களில் தாலி பட; அதனையடுத்துதான் எல்லோருக்கும் அவர்கள் திருமணம் நடந்த விஷயமே தெரியவந்ததாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X