Tere Ishk Mein: பாலிவுட்டில் பட்டையை கிளப்பும் தனுஷ்.. தேரே இஷ்க் மே அங்கே க்ளிக் ஆக என்ன காரணம்?
மும்பை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான டிராகன் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்தில் அவர் கல்லூரி மாணவராக அட்டகாசம் செய்துக் கொண்டு அதன் பின்னர், அவர் எப்படி திருந்துகிறார், திருத்தப்படுகிறார் என்பதே கதையாக இருக்கும்.
இந்நிலையில், அதே போன்ற ஒரு அடாவடி கல்லூரி மாணவராகவே இந்த வயதிலும் தனுஷ் நம்பும்படியாக வருவதும், அவருக்குள் இருக்கும் அந்த கோபத்தை குறைக்க போலி லவ் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் கிருத்தி சனோன் தனுஷை உண்மையாகவே எப்போது லவ் பண்ணுகிறார். அவர் தாடி வளர்க்காமல் குடிக்கு அடிமையாகி உயிர் போகும் நிலைக்கு ஏன் செல்கிறார் என்பதே தேரே இஷ்க் மே படத்தின் கதை.

இந்தியில் தனுஷ் அறிமுகமான ராஞ்சனா (அம்பிகாபதி) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதில் இருந்தே இந்தியில் தனுஷுக்கான ரசிகர்களும் ஆனந்த் எல். ராய் படங்களுக்கான ரசிகர்களும் உள்ளனர். அதுதான் முதல் வாரத்தில் தேரே இஷ்க் மே படத்தை 3 நாட்களில் 51 கோடி வசூலை இந்தியாவில் ஈட்ட உதவியுள்ளது.
தேரே இஷ்க் மே பட்ஜெட்: விமான ஓட்டியாக எல்லாம் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். கல்லூரி காட்சிகள், விமானப்படை போர் காட்சிகள் என புரொடக்ஷன் வேல்யூ அதிகம் நிறைந்த இந்த பாலிவுட் படத்தின் பட்ஜெட் அதிகபட்சம் 85 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேரே இஷ்க் மே திரைப்படம் படத்தின் பட்ஜெட்டை பாக்ஸ் ஆபீஸில் கண்டிப்பாக வசூல் செய்துவிடும் என்றும் அடுத்த வாரத்துக்குள் 100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் சம்பளம்: இந்த படத்தில் நடிகர் தனுஷின் சம்பளம் வெறும் 15 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் வசூலிலே தனுஷ் தனது சம்பளத்தை பாக்ஸ் ஆபீஸ் மூலம் பெற்றுத் தந்துவிட்டார் என்கின்றனர். நடிகை கிருத்தி சனோனுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர். தமிழ்நாட்டில் தனுஷின் சம்பளம் அதிகமாக உள்ள நிலையில், இந்தி படத்துக்கு அங்கே உள்ள மார்க்கெட் மற்றும் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப அவர் சம்பளம் வாங்கியுள்ளார் எனக் கூறுகின்றனர்.
சையாரா வசூல் வேட்டை: இந்த ஆண்டு காதல் படங்கள் நாடு முழுவதும் வெற்றியை பெற்றுள்ளன. அதுவும் இந்தியில் சையாரா திரைப்படம் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்நிலையில், தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் இருவரும் இணைந்து இன்றைய இளைஞர்களுக்கு காதல் ரசத்தை பிழிந்துக் கொடுக்கும் படமாக தேரே இஷ்க் மே உருவாகியுள்ள நிலையில், கண்டிப்பாக படம் 100 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே படம் பிளாக்பஸ்டர் கணக்கில் வரும் என்கின்றனர். இப்போதைக்கு படம் ஹிட் தான். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய தூணாக உள்ளது.
ஹாட்ரிக் வெற்றி: நடிகர் தனுஷ் இந்த ஆண்டு தெலுங்கில் குபேரா படத்தின் மூலம் 100 கோடி வசூலும் தமிழில் இட்லி கடை படத்தின் மூலம் 72 கோடி வசூலும் தேரே இஷ்க் மே திரைப்படம் மூலம் இதுவரை உலகளவில் 65 கோடி வசூலும் அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழிலும் படத்தை கொஞ்சம் புரொமோட் செய்து வெளியிட்டு இருந்தால், குறைந்தபட்சம் 20 கோடியாவது வசூல் வந்திருக்கும் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். ராஞ்சனா படத்தின் கனெக்ஷனும் இந்த படத்தை இந்தி ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











