மக்கள் செல்வன் பட்டம் எனக்கு இப்படித் தான் கிடைத்தது... விஜய் சேதுபதி சொன்ன தகவல்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே கட்டாயமாக வித்தியாசமான படமாக தான் இருக்கும்
ஹீரோவாக நடித்து வரும் அதேசமயம் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடிக்க கூடிய இமேஜ் பார்க்காத ஒரு ஹீரோவாக உள்ளது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
தமிழையும் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தனக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் எப்படி கிடைத்தது என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று
வெண்ணிலா கபடிகுழு,புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர். தான் நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்காக தன்னைத்தானே அர்ப்பணித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டும் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

இமேஜை மெயின்டெயின் செய்ய
முன்னணி நடிகராக ஆன பிறகு பெரும்பாலான நடிகர்கள் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க மாட்டார்கள் தங்களது இமேஜை மெயின்டெயின் செய்ய வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் அதுபோன்ற விஷயங்களில் இருந்து முற்றிலும் மாறுபடும் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருக்கும்போதே வில்லனாகவும், சிறப்பு தோற்றங்களில், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.அந்த பண்பு ரசிகர்கள் அனைவரையும் வியப்படையச் செய்கிறது

காத்ரீனா கைஃப் ஜோடியாக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து கலக்கிய விஜய் சேதுபதிக்கு இப்பொழுது பாலிவுட்டிலிருந்து பட வாய்ப்புகள் குவிகிறது. அந்த வகையில் மாநகரம் படம் பாலிவுட்டில் மும்பை கார் என்ற பெயரில் உருவாகிறது. அதைத் தொடர்ந்து காத்ரீனா கைஃப் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மற்றும் வசனமே இல்லாத காந்தி டாக்ஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வரும் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் எப்போது கிடைத்தது என்ற தகவலை அவர் பகிர்ந்துள்ளார்

புளியோதரையும் தொக்கும்
தன்னை திரையில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து நடித்த திரைப்படம் தர்மதுரை. இப்படத்தின் படப்பிடிப்பு ஆண்டிபட்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் காலையில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் பசியாக இருந்ததால் அங்கு வேலைக்கு சென்றவர்களிடம் புளியோதரையும் தொக்கும் வாங்கி கூச்சப்படாமல் சாப்பிட்டுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நினைத்திருந்தால் அங்கே உள்ள பெரிய ஹோட்டலில் ஜம்மென்று சாப்பிட்டு இருக்க முடியும் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு யாரென்றே தெரியாத தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் வேலையாட்களிடம் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிட்ட அந்த எளிமையை பார்த்த சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அந்த இடத்திலேயே சூட்டியுள்ளார். அதன்பிறகு தர்மதுரை படத்தில் இருந்து மக்கள் செல்வன் என்ற பட்டத்துடன் விஜய் சேதுபதியின் பெயர் படங்களில் தோன்ற ஆரம்பித்து இப்பொழுது அனைவரும் அவ்வாறு அழைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











