ஒன் லாஸ்ட் டான்ஸ்.. ஜனநாயகன் ‘தளபதி கச்சேரி’ எப்படி?.. இதுக்கு மேல இப்படி பார்க்க முடியாதா?
சென்னை: 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் தாண்டி ஜென் ஸி தலைமுறை வரை தளபதி விஜய்யின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு ஆட்டம் போடாத ரசிகர்களே இருக்க முடியாது. கடைசி படமாக ஜனநாயகன் என விஜய் அறிவித்த நிலையில், அரசியல் படமாக இருக்கும் என்றும் ஆட்டம் பாட்டத்துக்கு எல்லாம் இடம் இருக்காது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எப்போதும் போல ரசிகர்களுக்கான தளபதி தான் நான் என்பதை மீண்டும் ஒருமுறை விஜய் நிரூபித்துள்ளார்.
கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் ஃபேன் பாய் போல ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிளான தளபதி கச்சேரி பாடலை செம கலர்ஃபுல்லாக கொடுத்துள்ளனர். இதைத்தான் விஜய்யிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்தனர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜய் இப்படியே இன்னும் பல ஆண்டுகள் இருந்து விடக் கூடாதா? ரசிகர்களை என்டர்டெயின் பண்ணக் கூடாதா என சுயநலமாக பல ரசிகர்கள் நினைத்தாலும் அவர் பொதுநலமாக மக்களுக்கு சேவை செய்யும் முடிவுடன் அரசியல் களத்தில் குதித்து விட்ட நிலையில், இது தான் கடைசி ஃபர்ஸ்ட் சிங்கிளா என ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
அசத்திய அனிருத்: விஜய், அனிருத், அறிவு என மூன்று பேரும் இணைந்து ஃபர்ஸ்ட் சிங்கிளை பாடியுள்ளனர். விஜய் வாய்ஸ் வரும்போதெல்லாம் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் ஆகிவிடுகிறது. லியோ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் அனிருத் விஜய்க்காக பக்கா மாஸ் ஃபர்ஸ்ட் சிங்கிளை கொடுத்துள்ளார். ரொம்பவே கலர்ஃபுல்லாகவும் விஜய்யின் தெறி டான்ஸ் உடன் அடுத்த சில மாதங்களுக்கு இந்த பாடல் தான் ரீல்ஸ் மற்றும் யூடியூபில் டிரெண்டிங்கில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி தாறுமாறு டான்ஸ்: ஒன் லாஸ்ட் டான்ஸ் என அனிருத் சொல்லும் இடம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், கடைசி படம் என்பதால், எந்தளவுக்கு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி ஆட வைக்க முடியுமோ அதை இந்த வயதிலும் தளபதி விஜய் அசத்தலாக செய்து அனைத்து தரப்பினரையும் கவரும் வேலையை பக்காவாக செய்துள்ளார்.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜு: முதல் சிங்கிள் பாடலிலேயே பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு இருவருமே தளபதி விஜய்யுடன் இணைந்து ஆடும் விதமாக பாடல் உருவாகி உள்ளது. இது எச். வினோத் படமா? அல்லது அட்லி படமா என்றே யோசிக்கும் அளவுக்கு தளபதி படத்தின் பாடலாகவே களைகட்டியுள்ளது. பாடல் வரிகள், மியூசிக் என அனைத்துமே வெறித்தனம் தான்.


Click it and Unblock the Notifications