'இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உங்க 22 வயசுன்னே சொல்லிக்கிட்டிருப்பீங்க!'

பாண்டிய நாடு வெற்றியை திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார் விஷால்.
வேலூரில் ஒரு திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு, நிருபர்களிடம் பேசினார்.
"என்னுடைய தொழில் நடிப்பது. என்னுடைய தெய்வமாகிய ரசிகர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன்," என வழக்கமாக ஆரம்பித்தவரிடம், 'உங்களுடைய திருமணம் எப்போது?' என்று நிருபர்கள் கேட்டனர்.
எனக்கு இப்போதுதான் 22 வயதாகிறது. இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதன் பின்னர் திருமணம் செய்வேன்,' என்றார்.
4 ஆண்டுகளுக்கு முன்னரும் 22 வயதுதான் என்றீர்கள். இப்போதும் 22 வயது என்றால் எப்படி? என்று நிருபர் மடக்கியபோது, அருகில் இருந்த இயக்குநர் சுசீந்திரன் 'இன்னும் 4 ஆண்டுகள் கழித்தாலும், இவர் அதே வயதைத்தான் கூறுவார்,' என்றார் தமாஷாக.
Comments


Click it and Unblock the Notifications