ரூ 100 கோடி ஜீவனாம்சம்... விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார் ஹ்ரித்திக் ரோஷன்!
மும்பை: மனைவியிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
ஹிருத்திக் ரோஷனுக்கும் பழம் பெரும் இந்தி நடிகர் சஞ்சய்கான் மகள் சுசானேக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு
திருமணம் முடிந்து 13 வருடங்கள் கழிந்த நிலையில் ஹ்ருத்திக் ரோஷனுக்கும் சுசானேக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.

ஹ்ரித்திக் அறிவிப்பு
சுசானே என்னை விட்டு பிரிய முடிவு செய்து விட்டார் என்று ஹ்ருத்திக் ரோஷனே அறிவித்தார். இதேபோல, சுசானேவும் விவாகரத்துக்கு தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.

அர்ஜுன் ராம்பாலுடன் உறவு
சுசானேவுக்கும் இந்தி நடிகர் அர்ஜுன் ரம்பாலுக்கும் நெருக்கமான உறவு உள்ளதாகவும் இதுதான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்றும் இந்திப் பட உலகில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

ரூ 100 கோடி
மனைவியை பிரிவதற்கு ஹ்ருத்திக் ரோஷன் ரூ.100 கோடி ஜீவனாம்சம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மனுக்கள் தாக்கல்
இந்த நிலையில் தான் மும்பை பாந்த்ரா நீதி மன்றத்தில் ஹ்ருத்திக் ரோஷன் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இதுபோல சுசானேவும் ஹிருத்திக்கை விவாகரத்து செய்ய தனியாக மனு தாக்கல் செய்துள்ளார். இது பரஸ்பர சம்மதத்தின் பேரிலான விவாகரத்து என்பதால், சீக்கிரமே தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்.


Click it and Unblock the Notifications











