ஹிருத்திக் ரோஷன் சம்பளம் ரூ.50 கோடி… அதிர்ச்சியில் கான் நடிகர்கள்

By Mayura Akilan

பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் 50 கோடி ரூபாய் கேட்டுள்ளார். இது இந்திய அளவில் இதுவரை எந்த நடிகரும் வாங்காத பெரிய தொகையாகும். இதை கேள்விப்பட்ட பாலிவுட் உலகின் 'கான்' நடிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர்.

நூறு கோடி நாயகன்

நூறு கோடி நாயகன்

சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் என கான் நடிகர்கள் கோலோச்சும் பாலிவுட் பட உலகில் ஹிருத்திக் ரோஷன் முன்னனி நடிகராக உள்ளார். இவர் நடித்த பல படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.

கிரிஷ் நாயகன்

கிரிஷ் நாயகன்

ஹிருத்திக் ரோஷன் நடித்த கிரிஷ் திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தது. இதனால் நேரடி தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொகஞ்சதாரோ

மொகஞ்சதாரோ

அசுதோஷ் கவ்ரிகர் இயக்கும் ‘மொகஞ்சதாரோ' என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஹிருத்திக்ரோஷனை அணுகினர். அவர் ரூ.50 கோடி சம்பளம் கேட்டாராம்.

சரித்திரப் பட நாயகன்

சரித்திரப் பட நாயகன்

ஏற்கனவே ஜோதா அக்பர் என்ற சரித்திர படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து இருந்தார். எனவே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் ‘மொகஞ்சதாரோ' படத்துக்கு ஹிருத்திக் ரோஷன் தான் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் கருதுகின்றனர். எனவே ஹிருத்திக் ரோஷன் கேட்ட ரூ.50 கோடியை கொடுக்க தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளது.

புருவம் உயர்த்தும் நாயகர்கள்

புருவம் உயர்த்தும் நாயகர்கள்

ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கப்படும் இந்த சம்பளம் பாலிவுட் பட உலகில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

பாங் பாங்

பாங் பாங்

தற்போது ஹிருத்திக் ரோஷன் பாங் பாங் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் தலையில் அடிபட்டு அறுவை சிகிச்சை வரை சென்றது. தற்போது இந்தப்படம் முடிவடைந்த பின்னர் சரித்திர படமான மொகஞ்சதாரோ படப்பிடிப்புதொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X