twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா லாக்டவுனால் கடும் வறுமை.. 100 சினிமா நடன கலைஞர்களுக்குப் பண உதவி செய்த பிரபல ஹீரோ!

    By
    |

    மும்பை: கொரோனா லாக்டவுனால் வேலை இல்லாமல் இருக்கும் சுமார் நூறு நடன கலைஞர்களுக்கு பிரபல ஹீரோ பண உதவி செய்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

    இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அது வேகமாக பரவி வருகிறது.

    ஆஸ்கருக்கு முன் பாலிவுட்டில் கோலோச்சிய இசைப்புயல்.. ஆஸ்கர் விருதுக்கு பின் ஒதுக்கப்பட்டாரா? ஏன்?ஆஸ்கருக்கு முன் பாலிவுட்டில் கோலோச்சிய இசைப்புயல்.. ஆஸ்கர் விருதுக்கு பின் ஒதுக்கப்பட்டாரா? ஏன்?

     அதிகரிக்கும் உயிரிழப்பு

    அதிகரிக்கும் உயிரிழப்பு

    கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,87,945-ல் இருந்து 13,36,861 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,209 -ல் இருந்து 8,49,432 ஆக உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601-ல் இருந்து 31,358 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

     லாக்டவுன் தளர்வு

    லாக்டவுன் தளர்வு

    கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக, கடந்த 4 மாதமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பலர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதனால் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

     சினிமா ஷூட்டிங்

    சினிமா ஷூட்டிங்

    ஆனால், சினிமா படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளை குறைவான நபருடன் தொடங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா ஷூட்டிங் தொடங்கவில்லை. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். நடன கலைஞர்களும் தினசரி சம்பளம் வாங்குபவர்கள்தான் என்பதால் அவர்களுக்கும் கஷ்டத்தில் உள்ளனர்.

     நடன கலைஞர்கள்

    நடன கலைஞர்கள்

    அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுமார் 100 நடன கலைஞர்களுக்கு பண உதவி செய்துள்ளார். நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தி உள்ளார். இதுபற்றி நடன ஒருங்கிணைப்பாளர் ராஜ் சுரானி கூறும்போது, இந்த கடினமான நேரத்தில் ஹிருத்திக் ரோஷன் உதவியுள்ளார்

     கொரோனாவால் பாதிப்பு

    கொரோனாவால் பாதிப்பு

    பல நடன கலைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். சிலர் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒரு நடனக் கலைஞரின் குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஹிருத்திக் உதவி செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடன கலைஞர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்' என்றார்.

    English summary
    Hrithik Roshan has extended financial help to as many as 100 dancers who have lost work opportunities due to Covid-19 pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X