மனைவிக்கு ரூ 400 கோடி ஜீவனாம்சம் தரும் ஹ்ரித்திக் ரோஷன்!

By Shankar

விவாகரத்துக்கு சம்மதிக்க மனைவி சுசானேவுக்கு ரூ 400 கோடியை ஜீவனாம்சமாகத் தர சம்மதித்துள்ளார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.

இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானேவும் காதலித்து 2000 - ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலும் சுசானேயும் நெருக்கமாக பழகுவதே இவர்கள் தகராறுக்கு காரணம் என கூறப்படுகிறது.

விவாகரத்து

விவாகரத்து

இருவரும் விவாகரத்து செய்து கொள்வதை ஹ்ரித்திக் ரோஷனே அதிகார பூர்வமாக அறிவித்தார். விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.

ரூ 400 கோடி

ரூ 400 கோடி

இந்த நிலையில் விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹ்ரித்திக் ரோஷன் ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சுசானே கேட்டுள்ளார்.

இதற்கு ஹ்ரித்திக் ரோஷனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து ஹ்ரித்திக் ரோஷன் கூறுகையில், "எனது காதலுக்கு நான் செலுத்தும் மிகப் பெரிய மரியாதை இது. நான் இல்லாத நிலையில்தான் சுசானேவின் முகத்தில் புன்னகை பிரகாசமாக இருக்கும் என்றால், அதற்காக நான் எதையும் செய்வேன். என் வாழ்க்கையில் சுசானேவின் காதல் நிலைத்திருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

சுசானே

சுசானே

இதுகுறித்து சுசானே அளித்துள்ள விளக்கத்தில், "இனி தனிப்பட்ட நபர்களின் விருப்பம் இது. எங்களுக்கு இரு அழகான குழந்தைகள் உள்ளனர். அவர்களை பாதுகாத்து வளர்த்தெடுப்பது எங்கள் இருவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறோம். அதை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.

சொத்துகள்

சொத்துகள்

ஹ்ரிதிக் ரோஷனுக்கு மொத்தம் ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன. ஜுஹூ கடற்கரையில் ஹிருத்திக் பெயரில் பிரம்மாண்ட பங்களா வீடு உள்ளது. பெங்களூரில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்தேரியில் நான்கு மாடி கட்டிடம் உள்ளது.

சிங்கப்பூரில் ஒரு வீடு உள்ளது. ஆனால் இந்த வீடு சுசானே பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

முதல் முறை

முதல் முறை

இந்தி திரைப்பட உலகில் இந்த அளவு பெரிய தொகை கொடுத்து ஜீவனாம்சம் பெற்ற ஒரே மனைவி சுசானேதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X